29 வயதில் 40 கோடி சம்பாரிக்கும் பெண்! என்ன செய்கிறார் தெரியுமா?
தன்னுடைய 29 வது வயதில் சுமார் 40 கோடி ரூபாய்க்கு சொந்தக்காரராக இருக்கும் Burger கம்பனி வைத்திருக்கும் பெண்ணின் சாதனை பலரை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
பெண்களில் புதைந்திருக்கும் இலட்சியங்கள்
பொதுவாக பெண்கள் ஏதாவது துறையில் சாதிக்க வேண்டும் என நினைப்பார்கள். ஆனால் சிலருக்கு மாத்திரமே அது சாத்தியமாகும்.
சிலரின் வீட்டின் நிலைமை மற்றும் அவர்களின் சில தவிர்க்க முடியாத கடமைகளால் பல முயற்சிகள் முறியடிக்கப்படுகிறது.
இதன்படி, இந்தியா - குர்கானைச் சேர்ந்த நீலம் சிங் எனப்படும் 29 வயது பெண்ணொருவர் Dayalbagh Educational Institute என்ற கல்லூரியில் பி.காம் படித்து முடித்துள்ளார்.
இதன் பின்னர் ஹைதராபாத்தில் உள்ள ICFAI-யில் (IBS) மார்க்கெட்டிங் துறையில் எம்.பி. ஏ படிப்பையும் முடித்துள்ளாராம். இவர் ஆரம்பத்தில் மாதந்தோறும் 5 லட்சம் ரூபாய் சம்பளம் கொடுக்கும் ஒரு நிறுவமொன்றில் தான் பணிபுரிந்து வந்துள்ளார்.
இந்த பணத்தை சேகரித்து வைத்துக் கொண்டு தனியாக ஒரு வியாபாரத்தை தொடங்க எண்ணினார்.
ஒரு நாளைக்கு 40 கோடி இலாபம் வரும் கம்பனி
சுமார் 5 வருடங்கள் எல்லா வேலைகளையும் பார்த்து தேவையான பணத்தை சம்பாரித்தார். பின்னர் கடந்த 2018 ஆம் ஆண்டு “தி பர்கர்” என்ற பெயரில் கம்பெனி-யை (The Burger Company) தொடங்கினார்.
தற்போது இந்த கம்பனியின் வருவாயில் 40 கோடி ரூபாயாக மாறியுள்ளது. இவர்களின் இந்த மாற்றத்திற்கு விடாமுயற்சியும் தொழில் பற்றும் தான் காரணம் ஆகும்.
இந்த நிலையில் இந்த கம்பனி தற்போது இந்தியாவில் ஏழு மாநிலங்களில் 100 விற்பனை நிலையங்களைக் கொண்டுள்ளது. அந்தளவு பிரபல்யமடைந்த கடையாக மாறியுள்ளது.
குறைந்த விலையில் சுவையான உணவு கொடுக்க நினைத்த இந்த பெண்ணின் சாதனை மற்ற பெண்களுக்கு ஒரு முன்னுதாரணமாக மாறியுள்ளது.
அந்த வகையில் இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த நெட்டிசன்கள், குறித்து பெண்ணிற்கு பாராட்டுகள் தெரிவித்து வருகிறார்கள்.