சுற்றி வளைத்த 5 நாய்கள்: மாட்டிக்கொண்ட 4 வயது சிறுமியின் பகீர் காட்சி
மத்தியப் பிரதேசம் தலைநகர் போபாலில் 4 வயது சிறுமியை தெரு நாய்கள் கூட்டமாக துரத்திச் சென்று, கடித்த கொடூர சம்பவத்தின் சிசிடிவி வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.
கூலித்தொழிலாளியின் மகளான 4 வயது சிறுமி ஒருவர் தனது வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்துள்ளார்.அப்போது அவரை கூட்டமாக தெரு நாய்கள் துரத்தியுள்ளன.
நாய்களிடம் இருந்து தப்பிக்க அந்த சிறுமி சிறிது தூரம் ஓடுகிறார். அப்போது, அவர் எதிர்பாராத விதமாக கீழே தடுக்கி விழுந்ததால், தெரு நாய்கள் சுற்றி வளைத்து கடிக்க துவங்கின.
காண்போரை பதைபதைக்க செய்ய வைக்கும் வகையில் சில நிமிடங்களுக்கு சிறுமியை சுற்றியிருந்த நாய்கள் கடித்து குதறுகின்றன.
அந்த சமயத்தில் அவ்வழியே சென்ற ஒருவர் விரைந்து செயல்பட்டு கல்லை வீசி நாய்களை விரட்டியடித்தார். இதன் பின்னரே நாய்கள் அங்கிருந்து தப்பிச்சென்றன.
போபாலின் பாக் செவானியா பகுதியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஆள்நடமாட்டாம் குறைவாக இருக்கும் சமயத்தில் இந்த சம்பவம் நிகழந்ததால் சிறுமியை காப்பாற்ற யாரும் இல்லாமல் அவருக்கு பலத்த காயம் ஏற்பட்டுள்ளது.