உயிரேயே காவு வாங்கும் சிவப்பு இறைச்சிகளின் இந்த 3 பகுதி - தவறியும் சாப்பிடாதீங்க
அசைவம் பிரியமான நபர்கள் அதில் இந்த 3 பகுதியையும் சேர்த்து சாப்பிட்டு வந்தால் மாரடைப்பு வழிவகுத்து அது உயிருக்கே ஆபத்தாக முடியும்.
மட்டன் 3 பகுதி
அசைவ பிரியர் என்றால் யாருக்கு தான் மட்டன்,சிக்கன் பிடிக்காது. அனைவரும் மட்டனை விரும்பி சாப்பிடுவார்கள். மனிதர்கள் சாப்பிடும் சிவப்பு இறைச்சிகளுக்குள் ஆடு, பன்றி இறைச்சி மற்றும் மாட்டிறைச்சி போன்றவை அடங்கும்.
இந்த சிவப்பு இறைச்சிகளில் வைட்டமின் பி12, இரும்பு, துத்தநாகம், செலினியம் மற்றும் நியாசின் போன்ற சத்துக்கள் நிறைந்துள்ளன. பொதுவாக நமது உடல் தாவர புரதங்களை விட விலங்குப்பரதத்தை அதிகமாக உறுஞ்சி எடுக்கும்.
ஆனால் சிவப்பு இறைச்சி வகை எல்லாம் மனித உடலுக்கு நல்லதல்ல. சில விலங்கு இறைச்சியால் செய்யப்பட்ட உணவுகளை சாப்பிடுவது இதய நோய் மற்றும் புற்றுநோய்க்கு வழிவகுக்கும் என்று நிபுணர்கள் கூறுகின்றனர்.
சிவப்பு இறைச்சியின் நன்மைகள்
இந்த இறைச்சியில் இருக்கும் புரதங்கள் நமது தசை வளர்ச்சிக்கு உதவுகின்றது.
இதில் இருக்கும் வைட்டமின்கள் பி12 நரம்பு செயல்பாட்டை மேம்படுத்துகிறது மற்றும் இரத்த சிவப்பணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கிறது.
இது துத்தநாகம், செலினியம் மற்றும் பாஸ்பரஸ் போன்ற தாதுக்கள் உடலின் செயல்பாட்டிற்கு மிகவும் முக்கியமாக இருக்கின்றது.
எப்பகுதியை சாப்பிட கூடாது
பதப்படுத்தப்பட்ட சிவப்பு இறைச்சி, அதிக கொழுப்புள்ள உறுப்புகள் மற்றும் அதிக வெப்பநிலையில் கிரில் செய்யப்பட்ட அல்லது பார்பிக்யூ செய்யப்பட்ட சிவப்பு இறைச்சி உணவுகள் நமது உடல் ஆரோக்கியத்தை முழதாக பாதிக்கலாம்.
இந்த இறைச்சிகளை அதிக வெப்பநிலையில் சமைக்கும் போது அது நமக்கு புற்றுநோயை உண்டாக்கும். பண்டி இறைச்சிகளை துண்டுகளாக வெட்டி அதை புகையூட்டும் போது உப்பு, பதப்படுத்துதல் மற்றும் பாதுகாப்புகள் சேர்க்கப்படுகின்றன.
சிலர் இந்த இறைச்சியை தவறாமல் சாப்பிடுவாாகள் அப்போது உடலில் அதிகளவான உப்புக்கள் உடலில் சேரும். இது பெருங்குடல் புற்றுநோய், இதய நோய் மற்றும் உயர் இரத்த அழுத்தம் போன்ற பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும்.
2.பன்றியின் தொடையில் இருந்து வெட்டப்படும் ஹாம் , ஆரோக்கியத்திற்கு தீங்கு விளைவிக்கும். மற்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளைப் போலவே, பதப்படுத்தப்பட்ட ஹாமிலும் சோடியம் அதிகமாக உள்ளது.
இதில் நைட்ரேட்டுகளும் உள்ளன. அதனால்தான் அதிகமாக ஹாம் சாப்பிடுவது சில வகையான புற்றுநோய் மற்றும் இதய நோய்களின் அபாயத்தை அதிகரிக்கிறது.
3. அடுத்து சலாமி என்பது புளிக்கவைக்கப்பட்டு காற்றில் உலர்த்தப்பட்ட இறைச்சியாகும். இதில் புரதம் நிறைந்திருந்தாலும், இதில் சோடியம் மற்றும் நிறைவுற்ற கொழுப்புகளும் அதிகமாக உள்ளன. இதை அதிகமாக பதப்படுத்துவதால் புற்றுநோய் உண்டாக்கும் இரசபாயனங்கள் தானக உருவாகின்றன.
மேலும் இதில் அதிக பக்டிறீயாக்கள் நிறைந்திருக்கின்றன. ஒரு நாளைக்கு 50 கிராமுக்கு மேல் பன்றி இறைச்சி, ஹாம் மற்றும் சலாமி போன்ற பதப்படுத்தப்பட்ட இறைச்சிகளை சாப்பிட்டால் அது இதய நோய் அபாயத்தை 18% அதிகரிக்கிறது.
சிவப்பு இறைச்சியில் உள்ள நிறைவுற்ற கொழுப்புகள் கெட்ட கொழுப்பின் அளவை அதிகரிக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |