குரங்குகளுக்காக சொந்த நிலத்தை எழுதி வைத்த மக்கள்! வினோதமான காரணம்
இந்தியாவில் குரங்குகள் வாழ்வதற்காக 32 ஏக்கர் நிலத்தை கிராம மக்கள் எழுதி வைத்துள்ள வினோத சம்பவம் நடந்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் அமைந்துள்ளது உப்லா என்ற கிராமம், இங்கு ஆயிரக்கணக்கான மக்கள் வசித்து வருகின்றனர்.
இவர்களுடன் குரங்குகளும் வசித்து வருகிறது, இவற்றை மக்கள் தங்களது குடும்ப உறுப்பினர்கள் போன்றே பாவித்து வருகின்றனர்.
அவைகளுக்கு உணவை வழங்கியும் பாதுகாத்து வருகின்றனர், இந்நிலையில் குரங்குகளை கௌரவிப்பதற்காக வினோதமான முடிவை எடுத்துள்ளனர் கிராம மக்கள்.
அதாவது, தங்களது நிலங்களை மொத்தமாக 32 ஏக்கர் நிலத்தை குரங்குகளுக்காக வழங்கியுள்ளனர்.
உப்லா கிராமத்தில் முன்காலத்தில் இருந்தே குரங்குகள் வாழ்ந்து வருவதாகவும், இதுவரையிலும் யாரையும் துன்புறுத்தியதில்லை எனவும் கிராம பஞ்சாயத்து தலைவர் தெரிவித்துள்ளார்.
மேலும் முற்காலத்தில் பண்டிகை நாட்களின் போது குரங்குகளுக்கு என்று தனியாக சடங்குகள் செய்யப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையே குரங்குகள் வாழும் இடத்தில் வனத்துறையினர் தோட்ட பணிகளை மேற்கொண்டுள்ளதால், குரங்குகளின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாகவும் கவலை தெரிவித்துள்ளார்.