புதனின் கேந்திர யோகம் - கன்னி,மிதுனம்,துலாம் ராசிகளை கையில் பிடிக்க முடியாதாம்
ஜோதிட சாஸ்திரத்தின்படி குறிப்பிட்ட 3 ராசிகள் கேந்திர யோகத்தால் பல நன்மைகளை பெற்று சமூதாயத்தில் உயர் நிலையை அடையப்போகின்றது.
கேந்திர யோகம்
கிரகங்கள் எப்போதும் தங்கள் கிரகத்தை மாற்றி 12 ராசிகளுக்கும் நற்பலனை கொடுக்கும். இது பல ராசிகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
புதன் ஒரு ராசியில் சிறப்பான நிலையில் இருந்தால் அவர்களுக்கு படிப்பு செல்வம் காரிய சித்தி என்பது சிறப்பாக முடியும்.
புதன் கிரகங்களிலேயே சந்திரனுக்கு அடுத்தப்படியாக குறுகிய நாட்களில் ராசியை மாற்றுவதால் தான், அவ்வப்போது தொழில், படிப்பு போன்றவற்றில் ஏற்றஇறக்கத்தை சந்திக்க நேரிடுகிறது.
தற்போது புதனால் கேந்திர யோகம் உருவாகி உள்ளது. இதனால் ராசிகள் பெறும் நன்மை பற்றி பார்க்கலாம்.
மிதுனம் | உண்மையில் கேந்திர யோகம் என்றால் அது இனிய பலன்களை தரும். உடன் பிறந்தவர்களுடன் சந்தோஷமாக இருப்பீர்கள். நிதி நிலை சிறப்பாக இருக்கும். மாணவர்கள் படிப்பில் சிறப்பாக இருப்பீர்கள். தொழில் ரிதியாக பல நன்மைகள் வந்து சேரும்.வாழ்க்கை துணையுடன் நெருக்கமாக இருப்பீர்கள். நீண்ட கால ஆசைகள் நிறைவேறும். தன்னம்பிக்கை அதிகமாகும். |
கன்னி | கேந்திர யோகத்தால் கன்னி ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவு கிடைக்கும். வெளி நாடுகளில் நீங்கள் வேலை செய்வீர்கள். வர்த்தகம் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். மாணவர்கள் தேர்வுகளில் சிறந்து விளங்குவார்கள். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். நல்ல பொருள் இன்பங்கள் கிடைக்கும் வாய்ப்புள்ளது. ஒவ்வொரு வேலையிலும் வெற்றி கிடைக்கும். பேச்சால் பல வேலைகளை திறம்பட முடிப்பீர்கள். |
துலாம் | கேந்திர யோகமானது துலாம் ராசிக்காரர்களுக்கு மகத்தான வெற்றியைத் தரப்போகிறது. நீண்ட கால பிரச்சனைகள் முடிவுக்கு வரும். வெற்றிகள் குவியும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானத்தில் உயர்வு ஏற்படும். ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். எடுக்கும் முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். கடின உழைப்புக்கான பலன் கிடைக்கும். நல்ல காலம் பிறக்கும் நேரம் இது. |
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).