குருவின் சஞ்சாரத்தால் இந்த 3 ராசிக்கு ஏற்பட போகும் விபரீதம்!
ஜோதிடத்தின் படி அனைத்து கிரங்களின் அமைப்பும், அவற்றின் ராசி மாற்றத்தின் பலனும் மனிதர்களின் வாழ்க்கையை பாதிக்கிறது. இதையடுத்து, பிப்ரவரி 22-ம் தேதி தேவகுரு வியாழன் அஸ்தமிக்கிறார். 23 மார்ச் 2022 வரை அவர் இந்த நிலையில் இருப்பார்.
தேவகுருவின் அமைவு அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், இந்த 3 ராசிக்காரர்கள் அதிக சிரமங்களை சந்திக்க நேரிடும். அஸ்தமன காலத்தில் கடகம், தனுசு, மீனம் ஆகிய ராசிக்காரர்களின் பிரச்சனைகள் அதிகரிக்கக்கூடும்.
இந்த ராசிக்காரர்கள் இந்த காலகட்டத்தில் புதிய வேலைகளைத் தொடங்குவதைத் தவிர்க்க வேண்டும். மேலும், புதிய நிதி முதலீடுகளை தவிர்ப்பது நல்லது.
இது தவிர, எந்த விதமான சர்ச்சைகளும் வராமல் இருக்க இந்த ராசிக்காரர்கள் தங்கள் பேச்சிலும் நடவடிக்கையிலும் கவனமாக இருப்பது நல்லது.
இதனைத்தொடர்ந்து, குரு பகவான் தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு அதிபதியாக விளங்குகிறார். இவர் கடகத்தில் உச்சத்திலும், மகர ராசியில் கீழ் நிலையிலும் இருப்பதாகக் கருதப்படுகிறது.
இது தவிர, 27 ராசிகளில், விசாகம், புனர்பூசம் ஆகிய ராசிகளுக்கும் இவரே அதிபதி. குரு பகவானின் அருளால்தான் மனிதர்கள் சத்தியப் பாதையில் செல்கிறார்கள்.