வெறும் 3 வயதில் 3 பதக்கம்: உலக சாதனை படைத்த சிறுவன்
இந்தியாவில் 3 வயது சிறுவன் 3 சாதனைகள் பெற்றதோடு, சிலம்பம் மற்றும் யோகாவில் சாதனை படைத்துள்ளார்.
மழலை மொழியில் பேசும் சித்தார்த், இரண்டரை வயதில் இருந்தே அவரது பெற்றோர் சிலம்பம் மற்றும் யோகா கற்றுக் கொள்வதற்கு மாஸ்டர் முகமது ஜாபீரை அணுகியதோடு, அவரிடம் சிறுவனும் மிகவும் ஆர்வத்தோடு கற்றுக் கொண்டுள்ளார்.
தினமும் இரண்டு வேலையும் யோகா மற்றும் சிலம்பம் என்று அசத்தியுள்ளார். விளையாட வேண்டிய காலத்தில் இவ்வாறு ஆர்வமாக இருந்ததால், ஆன்லைன் மூலம் 6 வயதிற்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கு சிலம்பப் போட்டி சென்னையிலிருந்து நடத்தப்பட்டது.
அந்த போட்டியில் 6 வயது சிறுவர்களுடன் 3 வயது சித்தார்த் போட்டியிட விண்ணப்பித்திருந்தார். இந்தப் போட்டியில் தமிழ்நாடு மட்டுமின்றி இந்தியா உள்பட பல்வேறு நாடுகளில் இருந்தும் சுமார் 800 பேர் பங்கு பெற்றனர். 800 பேர் பங்குபெற்ற இந்த போட்டியில் சித்தார்த் தங்கப்பதக்கம் பெற்று, முதல் பரிசை பெற்றார்.
மேலும், நோபல் வேர்ல்ட் ரெக்கார்ட் புத்தகத்திலும் இடம் பெற்றுள்ளார். யோகாசனத்தில் முட்டையின் மேல் சமகோணசனம் செய்தும், நிமிடத்தில் பத்து ஆசனம் செய்தும், பதக்கங்கள் வென்றும் சோழரன் புக்சாப் ஆப் வேல்ட்டு ரெக்கார்டில் சாதனையை பதிவு செய்துள்ளார்.
மூன்று வயதில் மூன்று பதக்கங்கள் பெற்றுள்ள சித்தார்த், வருங்காலங்களில் தமிழகத்திலிருந்து செல்லும், வெல்லும் ஒலிம்பிக் வீரராக வருவார் என பலரும் பாராட்டி வருகின்றனர்.


