50 வயது நபரிடம் துடியாய் துடித்த 3 வயது குழந்தை: அதிரடியாக கிடைத்த தண்டனை
3 வயது குழந்தையை வன்கொடுமை தொல்லை செய்த 50 வயது நபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சென்னை வியாசர்பாடி ரத்தினம் தெருவை சேர்ந்தவர் ரவி(50). இவர் அதே குடியிருப்பில் வசித்துவரும் 3 வயது குழந்தைக்கு வன்கொடுமை தொல்லை கொடுத்துள்ளார்.
இதுகுறித்து குழந்தையின் பெற்றோர் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு சென்னை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் நடந்து வந்த நிலையில், ரவி மீதான குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டது.
குழந்தையை கடத்தி சென்ற குற்றத்திற்காக 7 ஆண்டு சிறை, 5 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. அதேபோன்று 12 வயதுக்கு கீழ் உள்ள குழந்தைகளை வன்கொடுமை செய்த குற்றச்சாட்டின் கீழ் 20 ஆண்டு சிறை தண்டனையும், 10 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்த தண்டனையை ஏக காலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி ராஜலட்சுமி உத்தரவிட்டுள்ளார். அத்துடன் பாதிக்கப்பட்ட குழந்தைக்கு நிவாரணமாக 5 லட்சம் ரூபாய் வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.