மூன்றே நிமிடத்தில் செய்யலாம்! சுவையான கரண்டி முட்டை குழம்பு
சுவையான கரண்டி முட்டை குழம்பு எளிய முறையில் வீட்டிலே எப்படி செய்யலாம் என்பதை இங்கே பார்ப்போம்.
தேவையானவை
- நாட்டு கோழி முட்டை - 4
- சின்ன நறுக்கிய பச்சை மிளகாய் - 1
- சிறிதாக நறுக்கிய வெங்காயம் - 1
- மிளகுதூள் - 1/2 தேக்கரண்டி
- தேவையான அளவு உப்பு
செய்முறை
முதலில் இவற்றை ஒன்றாக அடித்து கலந்து கொள்ளவும். எண்ணையை ஊற்றி முட்டையை கலந்து கொள்ளவும்.
தாளிப்பு கரண்டியில் பாதி அளவு மட்டும் சேர்த்து குறைந்த தீயில் கொஞ்சம் மிளகு தூளை சேர்த்து 2 நிமிடம் வேக வைத்து திரும்பி போடவும்.
1 கைபிடி அளவு நறுக்கி தேங்காய், 10 பூண்டு, 20 முந்திரி பருப்பு, 1 தேக்கரண்டி மிளகு, கொஞ்சம் தண்ணீர் ஊற்றி மிக்சியில் அரைத்து கொள்ளவும்.
பிறகு ஒரு கடாயில் 2 மேசைக்கரண்டி எண்ணெய் சேர்த்து 1/2 தேக்கரண்டி கடுகு, 1/2 தேக்கரண்டி வெந்தயம், கறிவேப்பிலை கொஞ்சம், சின்ன வெங்காயம் வதக்கவும்.
அதன் பின் நறுக்கிய 3 தக்காளி சேர்த்து நன்றாக வதக்கியப்பின் 1 தேக்கரண்டி மிளகாயம் தூள் 1 தேக்கரண்டி மல்லித்தூள், 1 தேக்கரண்டி சீரகத்தூள் ஏற்கனவே அரைத்த முந்திரிக்கலவையுடன் தண்ணீர் சேர்த்து உப்பு சேர்த்து கொதிக்க விடவும். மீதமான தீயில் முடிவிடவும்.
பின் கண்டி முட்டை ஒன்று ஒன்றாக சேரத்து கலந்து விடவும். அதில் கொஞ்சம் மிளகுத்தூள் கொஞ்சம் கொத்தமல்லி சேரத்து இறக்கிவிடவும்.
சூடான சாதத்துடன் சேர்த்து சாப்பிட்டால் சுவையாக இருக்கும்.