செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி: எந்த 3 ராசியினர் தொழிலதிபர் ஆவார்கள் தெரியுமா?
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியினால் எந்தெந்த ராசியினர் தொழிலில் முன்னேற்றம் அடைவார்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சி
ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்ச்சி மிக முக்கியமாக பார்க்கப்படுகின்றது. கிரகங்களின் தளபதியாக இருக்கும் செவ்வாய், தைரியம், வீரம், வலிமை, துணிச்சல் ஆகியவற்றிற்கு காரணியாக இருக்கின்றார்.
மேஷம் மற்றும் விருச்சிக ராசியிகளின் அதிபதியாக இருக்கும் செவ்வாய், 45 நாட்களுக்கு ஒருமுறை ராசியினை மாற்றுவதுடன், அவ்வப்போது நட்சத்திரத்தினையும் மாற்றுகின்றார்.
தற்போது ரிஷப ராசியில் பயணித்து வரும் செவ்வாய் ஜுலை 24ம் தேதி மிருகசீரிடம் நட்சத்திரத்திற்குள் நுழையவுள்ளார். இந்த நட்சத்திரத்தின் அதிபதியே செவ்வாய் என்பதால் இந்த பெயர்ச்சி சிறப்பான பலன்களை அளிக்குமாம்.

மேஷம்
செவ்வாயின் இந்த நட்சத்திர பெயர்ச்சியினால் மேஷ ராசியினர் முன்னேற்றத்தினைக் காண்பார்கள். புதிய வாய்ப்புகள் தேடி வருவதுடன் நீண்ட நாட்களாக முடியாமல் இருந்த வேலைகள் முடிவடையும்.
தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன், வேலைகளில் சில முக்கிய முடிவையும் எடுப்பீர்கள். நல்ல ஆதாயங்களைத் தருவதுடன், கடின உழைப்பிற்கு பலன் கிடைக்கும்.
வேலை தொடர்பான பயணங்கள் நல்ல ஆதாயத்தினை அளிப்பதுடன், மாணவர்களும் படிப்பில் சிறந்து விளங்குவார்களாம். தொழிலிலும் முன்னேற்றம் அடையலாம்.

மகரம்
மகர ராசியினருக்கு இந்த செவ்வாய் பெயர்ச்சியினால் தொழிலில் முன்னேற்றத்தினை அடைய முடிகின்றது. வியாபாரிகளுக்கு நல்ல லாபம் கிடைப்பதுடன், முதலீடுகளில் இரட்டிப்பான லாபத்தினைப் பெறுவீர்கள்.
தடைபட்ட வேலைகள் அனைத்தும் வெற்றிகரமாக முடியும் நிலையில், பணியிடங்களில் வேலை செய்பவர்களுக்கு சம்பள மற்றும் பதவி உயர்வு கிடைக்கின்றது.
குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாக இருப்பதுடன், வாழ்க்கைத் துணையுடனான உறவும் சிறப்பாகவே இருக்குமாம்.

சிம்மம்
செவ்வாய் இந்த பெயர்ச்சியினால் சிம்ம ராசியினருக்கு அதிர்ஷ்டம் அதிகரிக்குமாம். புதிய வாகனம் வாங்கும் வாய்ப்பு கிடைப்பதுடன், சொத்து தொடர்பான பிரச்சனைகளும் தீர்ந்து, ஆதாயம் கிடைக்கும்.
குடும்பத்தில் அமைதி, சந்தோஷம் அதிகரிப்பதுடன், தொழில் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றத்தினை காணலாம். பணிபுரிபவர்கள் உயர் அதிகாரிகளின் முழு ஆதரவைப் பெறுவீர்கள்.
இந்த காலத்தில் புதிய நட்புகள் கிடைக்கும் நிலையில், நட்பினால் நல்ல நிதி ஆதாயங்களும் கிடைக்குமாம். புதிய வருமான வழிகள் உருவாகும் வாய்ப்பும் உள்ளது. இதனால் நிதி நிலை மேலும் வலுவலடையும்.

இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |