தலைமுடியை நீளமாக வளர்க்கணுமா? அப்போ ஷாம்பூவுடன் இதை கலந்தால் போதும்
பொதுவாக எல்லோருக்கும் முடி கொட்டும் பிரச்சனை அதிகமாக இருக்கின்றது. தலைமுடி நீளமாக இல்லாவிட்டாலும் அதை அடர்த்தியாக வைத்திருப்பது அவசியம்.
அந்த வகையில் தலைமுடியை அடர்த்தியாக வைத்திருப்பதில் கவனம் செலுத்தி வருகின்றனர். இதற்கு நாம் கெமிக்கல் பொருட்களை பயன்படுத்தாமல் இயற்கை வழிமுறைகளை பயன்படுத்தியால் நல்ல பலன் கிடைக்கும்.
எல்லோருக்கும் இருக்கும் ஒரு ஆசை தலைமுடி அடர்த்தியாகவும் நீளமாகவும் இருக்க வேண்டும் என்பது தான். பலரும் தலைக்கு ஷாம்பு கொண்டு தான் கழுவுவார்கள்.
ஆனால் இது தலைமடிக்கு நல்லதல்ல ஆனால் ஷாம்புவுடன் சில பொருட்களை சேர்த்து கழுவும் போது அது தலைமுடிக்கு ஊட்டமளித்து நீளமாக வளர்க்கும். இதை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம்.
தலைமுடி
தினமும் குளிக்கும் போது ஷாம்புவுடன் இரண்டு ஸ்பூன் காபி தூள், ஒரு ஸ்பூன் இலவங்கப்பட்டை தூள் மற்றும் இரண்டு ஸ்பூன் தேன் இவை மூன்றையும் சேர்த்து கலந்து தலை முடிக்கு பயன்படுத்தி வந்தால் தலைமுடி பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும்.
காபி முடி வளர்ச்சிக்கு பெரிதும் உதவுகிறது.காஃபி முடி உதிர்வை குறைக்கும் மற்றும் புதிய முடி வளர உதவும். அதுபோல லவங்கப்பட்டையும் முடி வளர்ச்சிக்கு உதவுகிறது.
எனவே இந்த முறையை இரண்டு வாரம் தொடர்ந்து செய்ய வேண்டும். இப்படி செய்தால் தலையில் முடி உதிர்வு நீங்கி புதிய முடி வளரத்தொடங்கும்.
இதற்கு ஒரு பாத்திரத்தில் தேவையான அளவு ஷாம்பு எடுத்துக் கொள்ள வேண்டும். பின்னர் அதை தலையில் தடவி பின்னர் அதை கழுவ வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |