மாரிமுத்துவின் கனவு வீட்டை திறந்து வைக்கும் 3 பிரபலங்கள்... வீட்டின் மதிப்பு எவ்வளவு தெரியுமா?
நடிகர் மாரிமுத்துவின் கனவு இல்லம் குறித்த சுவாரசியமான தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
நடிகர் மாரிமுத்து
கடந்த 2008ஆம் ஆண்டில் கண்ணும் கண்ணும் என்ற திரைப்படத்தை இயக்கிய இவர், சுமார் 6 வருடங்கள் கழித்து விமல், பிரசன்னா, ஓவியா, அனன்யா, இனியா உள்ளிட்ட நட்சித்திரங்களை வைத்து புலிவால் என்ற திரைப்படத்தையும் இயக்கினார்.
அதற்கு முன்பு, இயக்குநர்கள் மணிரத்னம், சீமான், எஸ்.ஜே. சூர்யா, வசந்த் ஆகியோரிடமும் பணியாற்றியுள்ளார். தற்போது இவரை மூலை முடுக்கெல்லாம் கொண்டு சேர்த்தது எதிர்நீச்சல் சீரியல் தான்.
மீம்ஸ் கிரியேட்டர் முதல் ஆண் மற்றும் பெண் ரசிகர்கள் என ஏகப்பட்ட ரசிகர்கள் பட்டாளத்தினை தனது நடிப்பினால் கவர்ந்தவர். இவரது முக பாவனை, தோரணை, ஏ... இந்தாம்மா... என்ற பேச்சு யாராலும் மறக்கமுடியாது.
சமீபத்தில் இவரது திடீர் மரணம் ஒட்டுமொத்த திரையுலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மாரிமுத்துவின் கனவு இல்லம்
இந்நிலையில் மாரிமுத்துவின் கனவு இல்லம் குறித்து சுவாரசியமான தகவல் வெளியாகியுள்ளது. பேட்டி ஒன்றில் தான் மிகப்பெரிய வீடு ஒன்றினை வாங்கியிருப்பதாக மாரிமுத்து கூறியிருந்தார். இதன் மதிப்பு ஒன்றரை கோடியிலிருந்து 2 கோடி என்று கூறப்படுகின்றது.
இந்த பிரம்மாண்ட வீட்டிற்கு, ஒவ்வொரு விஷயத்தையும் பார்த்து பார்த்து மாரிமுத்து செய்துள்ளார். மரத்தினால் ஆன சிற்பங்கள், கலைநயத்துடன் கூடிய பெயிண்டிங் என தனது ஆசையை நிறைவேற்றியுள்ளார்.
எதிர்நீச்சல் சீரியல் குழுவினரிடம் விரைவில் கிரகப்பிரவேசம் செய்யவுள்ளதாகவும் கூறியுள்ளார். மேலும் குறித்த கனவு இல்லத்தை திறந்து வைக்க மூன்று திரைப்பிரபலங்களை அழைப்பதாகவும் கூறியுள்ளார். ஆம் சிவகுமார், சூர்யா, கார்த்தி ஆகியோர் திறந்து வைக்க வேண்டும் என்று கனவு இல்லத்தை கட்டியுள்ளார்.
ஆனால் இவரது ஆசையை நிறைவேறாமல் போன றிலையில், குறித்த 3 பிரபலங்கள் மாரிமுத்துவின் ஆசையை விரைவில் நிறைவேற்றுவார்கள் என்றும் மாரிமுத்துவின் இழப்பிலிருந்து மீண்டு வந்த பின்பு குடும்பத்தினர் கிரகபிரவேசத்தை நடத்துவார்கள் என்றும் கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |