ரியல்மி 5ஜி போனுக்கு அட்டகாசமான ஆஃபர்... எந்த மாடலுக்கு தெரியுமா?
Realme 12 X 5 ஜி ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் நிறுவனம் அட்டகாசமான தள்ளுபடியை வழங்கியுள்ளது.
Realme 12x 5G
Realme 12x 5G ஸ்மார்ட்போன் 50எம்பி கேமரா, டைமன்சிட்டி, 5000எம்ஏஎச் பேட்டரி, ஃபாஸ்ட் சார்ஜிங் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.
குறித்த ஸ்மார்ட்போனுக்கு பிளிப்கார்ட் தளத்தில் 27 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகின்றது. இது ரூ.12,999 விற்பனை செய்யப்படுகின்றது.
மேலும் தெரிவு செய்யப்பட்ட சில வங்கி கார்டுகளை பயன்படுத்தினால் மேலும் 5 சதவீதம் கேஷ் பேக் சலுகையும் உள்ளது.
சிறப்பம்சங்கள் என்ன?
6.72-இன்ச் ஃபுல் எச்டி பிளஸ் எல்சிடி (Full HD+ LCD)டிஸ்பிளே வசதியுடன் வெளிவந்துள்ளது. சக்திவாய்ந்த மீடியாடெக் டைமன்சிட்டி 6100 பிளஸ் (MediaTek Dimensity 6100+) சிப்செட் வசதியை கொண்டுள்ளது.
குறிப்பாக இந்த சிப்செட் மேம்பட்ட செயல்திறன் வழங்கும். மேலும் மாலி ஜி57 ஜிபியு (Mali G57 GPU) கிராபிக்ஸ் கார்டு கொண்டுள்ளது. எனவே கேமிங் பயனர்கள் நம்பிக்கையாக இதனை வாங்கலாம்.
ரியல்மி யுஐ 5.0 (Realme UI 5.0) சார்ந்த ஆண்ட்ராய்டு 14 (Android 14) இயங்குதள வசதியுடன் இந்த போன் வெளிவந்தது. அதேபோல் 6ஜிபி ரேம் மற்றும் 128ஜிபி மெமரி கொண்டுள்ளது.
குறிப்பாக Side-mounted Fingerprint Scanner மற்றும் IP54 தர Dust & Splash Resistant ஆதரவுகளைக் கொண்டுள்ளது. மேலும் 50எம்பி பிரைமரி கேமரா + 2எம்பி மேக்ரோ கேமரா என்கிற டூயல் ரியர் கேமரா செட்டப் கொண்டுள்ளது.
பின்பு செல்பிகளுக்கும், வீடியோகால் அழைப்புகளுக்கும் என்றே 8எம்பி கேமரா கொண்டுள்ளது. எல்இடி பிளாஷ், டூயல் ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பல சிறப்பு அம்சங்கள் உள்ளன.
அதேபோல் 5000mAh பேட்டரி வசதியும், பின்பு 45 வாட்ஸ் சூப்பர்வூக் (SuperVOOC) ஃபாஸ்ட் சார்ஜிங் வசதியும் கொண்டுள்ளது. எனவே இதனை விரைவாக சார்ஜ் செய்துவிட முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் இந்த போனின் எடை 188 கிராம் ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |