இது தான் சூர்யா...அண்ணனை பற்றிய ரகசியத்தை எமோஷனலாக உடைத்த நடிகர் கார்த்தி!
நடிகர் கார்த்தி தன் அண்ணன் சூர்யாவை பற்றி எமோஷனல் பதிவு ஒன்றை சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
நடிகர் சூர்யா சினிமாவில் அறிமுகமாகி இன்றுடன் 25 ஆண்டுகள் ஆகிறது.
இதனை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டுவிட்டரில் #25YearsOfCultSuriyaism என்கிற ஹேஷ்டேக்கும் டிரெண்டாகி வருகிறது.
இந்நிலையில், நடிகர் கார்த்தியும் அந்த ஹேஷ்டேக்கை பயன்படுத்தி, தன் அண்ணனை பற்றி எமோஷனல் பதிவு ஒன்றை போட்டுள்ளார்.
கார்த்தியின் எமோஷனல் பதிவு
அதில், “அவர் தனது ஒவ்வொரு மைனஸையும் மிகப்பெரிய பிளஸ் ஆக்க இரவும், பகலும் உழைத்தார்.
தன் சொந்த சாதனைகளை விஞ்சுவதில் மட்டுமே அவர் கவனம் செலுத்தினார்.
ஒரு நபராக தாராள மனசு கொண்ட இவர் அதனை இன்னும் பெரிதாக்கும் விதமாக ஆயிரக்கணக்கான தகுதியுள்ள குழந்தைகளின் வாழ்வை வடிவமைத்தார்.
அதுதான் என் அண்ணன். என குறிப்பிட்டு சிறுவயதில் சூர்யாவுடன் எடுத்த போட்டோவை பதிவிட்டுள்ளார் கார்த்தி.
