80 வயது முதியவரின் காதல் வலையில் சிக்கிய 23 வயது யுவதி!
சீனாவில் 80 வயது முதியவர் ஒருவர் 23 வயது இளம்பெண் ஒருவரை திருமணம் செய்து கொண்ட செய்தி தற்போது இணையத்தில் மட்டுமல்லாமல் உலகளாவிய ரீதியில் பேசப்பட்டு வந்துள்ளது.
திருமணம்
திருமணம் என்பது ஒரு நிலைத்த பந்தமாகும். தம்பதிகள் இருவரின் மனதிற்கும் பிடித்திருந்தால் அவர்களுக்கு வீட்டில் உள்ள பெரியவர்களால் நிச்சயித்து திருமணம் செய்து வைக்கப்படும்.
ஆனால் ஒரு முதியவரே தன் பேத்தி வயதில் இருக்கும் ஒரு பெண்ணை திருமணம் செய்துள்ளார். சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் உள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்தவர் லீ. இவருக்கு வயது 80 ஆகும்.
அப்போது அங்கு பணிபுரிந்து வந்த சியாஃபங் என்ற 23 வயது இளம்பெண் ஒருவர் பழகி வந்துள்ளார். இது போக போக சில நாட்களில் இருவரும் காதலிக்க தொடங்கி உள்ளனர். இதனைத் தொடர்ந்து சியாஃபங் தனது வீட்டில் லீயை திருமணம் செய்ய விரும்புவதாக கூறியுள்ளார்.
ஆனால் அவரது வீட்டில் கடுமையாக இந்த திருமணத்தை எதிர்த்துள்ளனர்.எனினும் முதியவர் மீது கொண்ட அன்பினால் சியாஃபங் வீட்டை விட்டு வெளியேறி பெற்றோர் எதிர்ப்பை மீறி முதியவர் லீயை அவர் திருமணம் செய்துகொண்டார்.
இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருவன் மூலம் இணயவாசிகள் பலரும் இதற்கு பல கருத்துக்களை கூறி வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |