உணவு டெலிவரி செய்தே வாரத்திற்கு 90,000 ஈட்டும் லண்டன் பெண் - எப்படி சாத்தியம் தெரியுமா?
உலகமெங்கிலும், பல இளைஞர்கள் படித்துவிட்டு வேலையில்லாமல் உணவு டெலிவரி செய்யும் வேலையைதான் செய்து வருகிறார்கள்.
லண்டனைச் சேர்ந்த அட்லான்ட்டா மார்டின் என்ற பெண் மளிகை பொருட்கள் மற்றும் உணவு டெலிவரி செய்து வாரத்திற்கு 90 ஆயிரம் ரூபாய் சம்பாரித்து ஆச்சரியப்படுத்தியுள்ளார்.
அதற்கு அந்த பெண்ணான அட்லான்ட்டா மார்டின் கார்ப்பரேட் நிறுவனங்களில் வேலை பார்த்தால் கூட இந்த அளவுக்கு சம்பாதிக்க முடியாது என தெரிவித்துள்ளார்.

நிறைய சம்பாரிக்க முடியும்
22 வயதுடைய அந்த பெண் விமான நிர்வாகத்தின் முழு நேர பணியில் இருந்து விலகிவிட்டு டெலிவரி ஊழியராக தனது காதலருடன் இணைந்து பணியாற்றி வருகிறார்.
11 மணிநேரம் வேலை இருந்தாலும், அதிகமாக சம்பளம் வருவதாகவும் கூறுகிறார். காதலருடன் சேர்ந்து இவர் யார் எவ்வளவு டெலிவரி செய்வோம் என போட்டி போட்டுக்கொண்டு செய்து வருகிறார்களாம்.
மேலும், இதுகுறித்து பேசிய அவர், “முதலில் இந்த வேலையில் சேரும் போது லண்டனில் மட்டும் தான் 24 மணிநேரமும் டெலிவரி செய்யக் கூடிய நிலை இருந்தது.
ஆனால், டெலிவரி வேலைக்கான தேவை அதிகரித்ததை அடுத்து பிரிட்டனிலும் அது தொடர்ந்து வருகிறது. என அட்லான்ட்டா மார்டின் கூறியுள்ளார்.