22 பாம்புகளுடன் விமான நிலையம் வந்த பெண்!
பாம்பென்றால் படையும் நடுங்கும் என்பார்கள். ஆனால், மொத்தமாக 22 பாம்புகளுடன் பெண் ஒருவர் பயணித்துள்ளார் என்பதை நம்ப முடிகின்றதா?
ஆம், மலேசியாவிலிருந்து சென்னை திரும்பிய பெண்ணின் பைகளிலிருந்து 22 பாம்புகள் மீட்கப்பட்டுள்ளன. இதில் பெண் கொண்டுவந்த ப்ளாஸ்டிக் டப்பாக்களில் பாம்புகள் வைக்கப்பட்டிருந்தன.
image - NDTV.com
கூடவே ஒரு பச்சோந்தியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதிகாரிகள் நடத்திய சோதனையிலேயே இது கண்டுபிடிக்கப்பட்டது. நீண்ட கம்பிகளின் மூலம் பாம்புகளை வெளியே எடுத்தனர்.
சில பாம்புகள் பெட்டிகளிலிருந்து ஆக்ரோஷமாக வெளிவந்தமை குறிப்பிடத்தக்கது. இவ்வாறு பாம்புகளுடன் வந்த பெண்ணை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
image - East coast daily english