ஆன்மாவை ஏலம் விட்ட விசித்திர இளைஞர்: என்ன காரணம்?
பெரிய பெரிய சொத்துகளைதான் எல்லாரும் ஏலம் விடுவாங்க. ஆனால் இந்த இளைஞர் சற்றே வித்தியாசமானவர்.
21 வயதான இந்த வெளிநாட்டு மாணவர், ஓப்பன் ஸீ என்ற என்எஃப்டி மார்க்கெட்டில் ஏலத்தில் விட்டுள்ளார்.
அந்த இளைஞரின் பெயர் ஸ்கைக். இவர் நெதர்லாந்தை சேர்ந்தவர். இவர் ஓபன் ஸீ மார்க்கெட்டில் சாயில் ஆஃப் ஸ்டினஸ் என்ற பெயரில் விற்பனை விளம்பரத்தைப் பதிவிட்டிருந்தார்.
அதில் அவர், "ஹலோ.. நீங்கள் ஏதும் ஆன்மாவை வாங்க விரும்புகிறீர்களா? எனது ஆன்மாவைப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதை வாங்கி நீங்கள் உங்களின் இஷ்ட தெய்வதுக்கு பகுதியாகவோ, அல்லது முழுமையாகவோ பலி கொடுக்கலாம்" என்று பதிவிட்டுள்ளார்.
கூடவே "sale of soul agreement" ஆன்மா விற்பனைக்கான ஒப்பந்த பத்திரம் என்றும் ஒரு ஆவணத்தை வெளியிட்டுள்ளார்.
இந்த ஏல அறிவிப்பு தான் இப்போதைய ஹாட் டாப்பிக். இதுவரை என்எஃப்டியில் ஏலத்தில் விடப்பட்டதிலேயே இந்த ஆன்மாவுக்கு தான் அதிக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இதன் பின்னணியில் இருப்பது பிளாக்செயின் தொழில்நுட்பம். பிளாக்செயின் தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்டுதான் கிரிப்டோகரன்ஸி, என்எஃப்டி போன்றவை செயல்படுகிறது.
பரிமாற்றம் பாதுகாப்பானதாகவும், வெளிப்படையாகவும் இருப்பதால் வங்கிகள் போன்ற இடைத்தரக அமைப்புகளின் தேவையை பிளாக்செயின் தொழில்நுட்பம் இல்லாமல் செய்துவிடுகிறது.
ஆனால், பிட்காயினைவிட என்எஃப்டி சற்றே வித்தியாசமானது. ஒவ்வொரு என்எஃப்டிக்கும் ஒரு மதிப்பு. ஒரு பிட்காயினைக் கொடுத்து இன்னொரு பிட்காயின் வாங்கிக் கொள்ளலாம்.
ஆனால், ஒரு என்எஃப்டியைக் கொடுத்து இன்னொரு என்எஃப்டி வாங்க முடியாது. என்எஃப்டி முதன்முதலாக 2017-ம் ஆண்டு கிரிப்டோகிட்டீஸ் என்ற ஆன்லைன் கேமில் தான் அறிமுகமானது.
என்எஃப்டியில் மட்டும் முதலீட்டாளர்கள் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தனர். குட்டி குட்டி ஜிஃப், பாடல்கள், வீடியோக்கள், மீம்ஸ்கள் எனப் பலவும் இங்கு இதை செய்தனர்!
ஆனால் ஆன்மாவை ஏலத்தில் விட்ட இந்த இளைஞரின் செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது!
