2026-ல் மக்களை காவு வாங்க காத்திருக்கும் அழிவுகள்.. தீர்க்கதரிசி கணிப்பால் எழும் பதற்றம்
2025 ஆம் ஆண்டு முடிவடைவதற்கு இன்னும் 19 நாட்களே உள்ள நிலையில், ஞானிகளின் தீர்க்கதரிசனங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
பிறக்கப்போகும் 2026 ஆம் ஆண்டில் சரி நமக்கு நல்ல காலம் பிறக்காத என ஏங்கும் மக்களின் நாமும் ஒருவராக இருப்போம். 2025 ஆம் ஆண்டில் ஏகப்பட்ட அழிவுகளை பார்த்த மக்கள் புத்தாண்டை நினைத்து பயம் கொள்ளும் அளவுக்கு கணிப்புகள் வெளியாகி கொண்டிருக்கின்றன.
இதன்படி, பலரும் அறிந்த பாபா வாங்கா ஜப்பானில் சுனாமி வரும் என கூறியிருந்தார். அவர் கூறியது போன்ற சுனாமி எச்சரிக்கை ஜப்பானுக்கு விடுக்கப்பட்டது.
அவரை தொடர்ந்து நோஸ்ட்ரடாமஸ் என்பவரின் கணிப்பு தற்போது வைரலாகி வருகின்றது. நோஸ்ட்ராடாமஸ் என அழைக்கப்படும் இவருடைய இயற்பெயர் மைக்கேல் டி நோஸ்ட்ராடாம் என்பதாகும். உலகில் நடக்கும் முக்கிய நிகழ்வுகளை முன்னரே கணித்து இவர் மக்கள் மத்தியில் பிரபலமானார்.
உதாரணமாக, உலகையே நடுங்க வைத்த 9/11 பயங்கரவாதத் தாக்குதல், இளவரசி டயானாவின் மரணம் போன்ற கணிப்புக்களை முன்னரே கூறியிருக்கிறார்.

கடந்த 1555ஆம் ஆண்டில் வெளியாகிய “லெஸ் ப்ராஃபெட்டீஸ்” என்ற புத்தகத்தில் கூறப்பட்ட கணிப்புக்கள் லத்தீன் சொற்றொடர்கள் மற்றும் பழைய பிரெஞ்சு மொழிகளை பயன்படுத்தி எழுதப்பட்டுள்ளது. சுமாராக 942 கணிப்புகளை நோஸ்ட்ரடாமஸ் கூறியிருக்கிறார்.
அப்படியாயின், நோஸ்ட்ரடாமஸுன் கணிப்பில் 2026-ஆம் ஆண்டில் என்னென்ன ஆபத்துக்கள் மக்களை கலங்கச் செய்யவுள்ளது என்பதை பதிவில் விளக்கமாக பார்க்கலாம்.
போர்க் கணிப்புகள்
1. நோஸ்ட்ராடாமஸ் கணிப்பில் 2026-ல் தேனீக்களின் தாக்கம் இருக்கும் என்பது மிக முக்கியமாக பார்க்கப்படுவது . இவர் தேனீக்கள் என இங்கு கூறுவது டொனால்ட் டிரம்ப் மற்றும் விளாடிமிர் புதின் போன்ற முக்கிய தலைவர்களை தான். இவர்கள் உக்ரைன் போர் ஆரம்பித்து சுமாராக நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு ரஷ்யாவின் வெற்றியுடன் முடிவடையும் எனக் கூறப்பட்டுள்ளது.

2. நோஸ்ட்ராடாமஸின் கணிப்பில், அமெரிக்கா- சீனா ஆகிய இரண்டு நாடுகளும் தொடர்ந்து பொருளாதார போரில் ஈடுபடுவதால் இந்த இரண்டு நாடுகளுக்கும் இடையில் ஒரு பதற்றமான நிலை உருவாக வாய்ப்பு உள்ளது.
3.சுவிட்சர்லாந்து நாட்டின் தெற்குப் பகுதியில் நடக்கும் போர் நடக்கும் எனக் கணிப்பில் கூறப்பட்டள்ளது. புத்தாண்டில் ஐரோப்பிய மோதல் வெடிக்கும் என்றும் டிசினோ வடக்கு இத்தாலி எல்லையில் இருக்கும் நாடுகள் இந்த போரில் கலந்து கொள்ளும் என்றும் நோஸ்ட்ராடாமஸ் கணிப்பில் கூறப்பட்டுள்ளது.