ஒவ்வொரு மாதமும் கிரகப்பெயர்ச்சி இடம்பெறும். அந்த கிரகப்பெயர்ச்சிளை வைத்து தான் ஒரு ராசியின் அதிர்ஷ்டத்தை துர்ரதிர்ஷடத்தை கூற முடியும்.
அந்த வகையில் சில ராசிகள் ஆரம்பமாகும் இந்த ஒக்டோபர் மாதம் கிரகப்பெயர்ச்சியில் சிக்கப்போகின்றது. க்கிரன், புதன் மற்றும் செவ்வாய் போன்ற பல சக்திவாய்ந்த கிரகங்கள் தங்களின் நிலையை அக்டோபர் மாதத்தில் மாற்றுகின்றன.
இது அவர்களுக்கு தேவையற்ற மன அழுத்தத்தையும், மோசமான விளைவுகளையும் ஏற்படுத்தும் என ஜோதிடப்படி கூறுகிறார்கள். அந்த ராசிகள் யார் என்பதை தெரிந்துகொள்ளலாம்.

ரிஷபம் | - அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகள் ரிஷப ராசியினருக்கு எதிர்பார்த்த ஆபத்துகளை ஏற்படுத்தப்போகிறது.
- செவ்வாய் பிரச்சனை உங்களுக்கு தீமைகளை தரும்.
- இதனால் ஆரோக்கியம் கடுமையாக பாதிக்கிறது.
- இதனால் அவர்களின் திருமண வாழ்க்கையிலும் பல பிரச்சினைகள் மற்றும் நெருக்கடிகள் ஏற்படுகின்றன.
-
தொழிலில் இந்த மாதம் நிறைய பிரச்சனைகள் வரும்.
- புதிய வியாபாரம் தொடங்க கூடாது.
- தேவையற்ற செலவுகள் அதிகரிக்கும்.
- மொத்தத்தில் அக்டோபர் மாதத்தில் ரிஷப ராசியினர் தங்கள் வாழ்க்கையில் பல்வேறு நெருக்கடிகளை சந்திக்க வேண்டியிருக்கும்.
|
துலாம் | - அக்டோபர் மாத கிரகப் பெயர்ச்சிகள் துலாம் ராசிக்காரர்களுக்கு மோசமான விளைவுகளை வழங்கப்போகின்றன.
- ஆரோக்கியம் பாதிக்கப்படலாம்.
- குடும்ப உறுப்பினரின் ஆரோக்கியத்திற்காக பெரும் தொகையை செலவு செய்ய நேரிடும்.
- எந்த முடிவையும் எடுப்பதற்கு முன், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக் கொள்வது நல்லது.
- ஒரு முடிவை எடுப்பதற்கு முன், ஒன்றுக்கு நூறு முறை ஆலோசிப்பது நல்லது.
- வாகனங்களை மிகவும் கவனமாக பயன்படுத்த வேண்டும் நீண்ட தூர பயணங்கள் வேண்டாம்.
|
மகரம் | - அக்டோபர் மாத கிரக பெயர்ச்சிகள் மகர ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல இன்னல்களை ஏற்படுத்தப்போகிறது.
- இது அவர்கள் வாழ்க்கையில் மிகவும் தீங்கு விளைவிக்கும் மாற்றங்களைக் கொண்டுவருகிறது.
- மாதத்தின் முற்பகுதியை விட உங்களுக்கு பிற்பகுதி மிகவும் மோசமானதாக இருக்கும்.
- குறிப்பாக பெண்கள் தங்கள் அமைதியையும், மகிழ்ச்சியையும் இழக்க நேரிடும்.
- மேலும் நெருங்கிய ஒருவரால் அவமதிப்பை சந்திப்பீர்கள்.
- அவர்கள் தொழிலில் பெரும் இழப்பை சந்திக்க நேரிடும்.
- இது அவர்கள் வாழ்க்கையில் நிதி சிக்கல்களை அதிகரிக்கும்.
|
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).