10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக நிலைகளில் ஏற்பகின்ற மாற்றங்களானது 12 ராசிகளிலும் சாதக பாதக மாற்றங்களை ஏற்படுத்தும் என்று நம்பப்படுகின்றது.
கிரக பெயர்ச்சிகளில் குறிப்பாக ராகு பெயர்ச்சிக்கு இந்து மதத்தில் பெரிதும் முக்கியத்துவம் கொடுக்கப்படுகின்றது. காரணம் ராகுவும் சனிபகவான் போல் ஒருவருடைய செயல்களின் அடிப்படையில் பாகுபாடு இன்றி பலன் கொடுப்பவர்.

ஜோதிடக் கணிப்பின் பிரகாரம், ராகு எதிர்வரும் டிசம்பர் மாதம் 2, 2025 அன்று அதிகாலை 2:11 மணிக்கு ராசியை மாற்றுகின்றார். தற்போது, ராகு பூர்வ பாத்ரபாத நட்சத்திரத்தின் முதல் இடத்தில் இருக்கிறார்.குறித்த திகதியில் சதாபிஷ நட்சத்திரத்தின் நான்காவது இடத்தில் இடப்பெயர்வு அடைகின்றார்.
இந்த ராகு பெயர்ச்சியானது 12 ராசிகளிலும் தாக்கம் செலுத்தினாலும், குறிப்பிட்ட 3 ராசிகளுக்கு எதிர்பாராத வகையில் பொருளாதார முன்னேற்றத்தையும் செல்வ செழிப்பையும் கொடுக்கப்போகின்றது.

அப்படி அதிஷ்ட பலன்களை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்

இந்த ராகு பெயர்ச்சியானது மிதுன ராசியினருக்கு எல்லா வகையிலும் மிகவும் சாதகமான பலன்களை கொடுக்க வாய்ப்புள்ளது.
பல நாட்களாக முயற்சி செய்து வந்த விடயங்களுக்கு நல்ல முடிவு கிடைக்கும். புதிய தொழில் ஆரம்பிப்பதற்கான வாய்ப்புகள் கைகூடி வரும். நிதி நிலையில் இதுவரை காலமும் இல்லாத அளவுக்கு உயர்ச்சி உண்டாகும்.
குடும்பத்தில் மகிழ்சிகரமான சூழல் நிலவும், திருமண வாழ்க்கையில் தம்பதிகளுக்கு இடையில் நீண்ட நாட்களாக நிலவி வந்த பிரச்சினைகளுக்கு தீர்வு பிறக்கும். பணவரவு திருப்திகரமாக அமையும்.
கடகம்

கடக ராசிக்காரர்களுக்கு குறித்த ராகு பெயர்ச்சியானது தொழில் ரீதியிலும், வியாபார ரீதியிலும் நல்ல முன்னேற்றத்தை கொடுக்கும்.
இதுவரை காலடும் வழங்கிய கடின உழைப்புக்கு எதிர்பார்த்ததை விட அதிகமான பலனை ராகு கொடுக்கப்போகின்றார். மேலதிகாரிகளிடமிருந்து பாராட்டுகளை பெறும் வாய்ப்பு காணப்படுகின்றது.
குடும்ப சூழல் மற்றும் ஆரோக்கியம் மேம்படும், மன அமைதியும் தொழில் மீதான ஆர்வடும் அதிகரிக்கும். வெளிநாட்டில் இருந்து நண்பர்கள், உறவினர்கள் மூலம் நிதி உதவி கிடைக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.
மகரம்

இந்த ராகு பெயர்வானது மகர ராசியினருக்கு எதிர்பாராத பண வரவையும் பதவி உயர்வையும் கொடுக்கப்போகின்றது.
வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு இந்த காலகட்டமானது உச்சகட்ட லாபத்தை ஏற்படுத்திக்கொடுப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது. நிதி விஷயங்களில் நிலைத்தன்மை உண்டாகும். நீண்ட கால முதலீடுகள் அதிக லாபத்தை கொடுக்கும்.
சிலருக்கு வெளிநாடு செல்லவோ அல்லது புதிய துறையில் வேலை செய்யவோ வாய்ப்புகள் உருவாகும். நேர்மறையான எண்ணங்கள் மேலோங்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |