புதாதித்ய ராஜயோகம் 2025... குபேரனை மிஞ்சிய ஆடம்பர வாழ்க்கையை பெறும் 3 ராசிகள்
ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் கிரக பெயர்ச்சிக்கு முக்கிய இடம் கொடுக்கப்படுகின்றது. கிரக மாற்றங்கள் ஆண்டியையும் அரசனாக்கும், அதே நேரம் அரசனையும் ஆண்டியாக்கும் என நம்பப்படுகின்றது.
அந்த வகையில் 2025 ஆம் ஆண்டில், புதன் தனுசு ராசியிலும், சூரியன் மகர ராசியிலும் நுழைவதால் புதாதித்ய ராஜயோகம் உருவாகவுள்ளது.
இந்த ராஜயோகத்தால் குறிப்பிட்ட சில ராசிகளின் வாழ்வில் பொற்காலம் ஆரம்பிக்கப்போகின்றது.
அப்படி புதாதித்ய ராஜயோகத்தால் குபோரனை மிஞ்சிய ஆடம்பர வாழ்க்கையை அனுபவிக்கப்போகும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்தவர்களுக்கு 2025 ஆம் ஆண்டு உருவாகும் புதாதித்ய ராஜயோகம் வாழ்வில் பல்வேறு வகையிலும் சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.
தொழில் ரீதியில் அவர்களே எதிர்ப்பார்க்காத அளவுக்கு நல்ல முன்னேற்றம் ஏற்படும்.நிதி தொடர்பாக இதுவரை காலமும் இருந்து வந்த சிக்கல்கள் நீங்கி புதிய வருமானத்துக்காக புதிய வழிகள் திறக்கும்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு அல்லது வெளிநாட்டில் உயர் கல்வியை தொடரும் வாய்ப்புகள் இந்த ராசியினருக்கு அமையும்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்தவர்களுக்கு புதாதித்ய ராஜயோகம் அபரிமிதமான சாதக பலன்களை கொடுக்கப்போகின்றது.
தொழில் தளத்தில் உரிய அங்கீகாரங்களைப் பெறுவார்கள். இந்த ராசிக்காரர்கள் வாழ்க்கையில் பல்வேறு சுப நிகழ்வுகள் நிகழ்வுள்ளது.
செல்ல செழிப்பு அதிகரிக்கும்.ஆண்டு முழுவதுமே பணவரவு சிறப்பாக இருக்கும். மொத்தத்தில் இவர்கள் ராஜ வாழ்க்கை வாழப்போகின்றார்கள்.
துலாம்
துலாம் ராசியில் பிறந்தவர்களுக்கு புதாதித்ய ராஜயோகம் குபேர வாழ்க்கையை கொடுக்கப்போகின்றது.
இவர்களின் நீண்ட நாள் நிதி சிக்கல்கள் புதன் மற்றும் சூரிய பகவானின் ஆசியால் தீர்க்கப்படும். செல்வ செழிப்பு நிறைந்த ராஜ வாழ்க்கை இவர்களுக்கு அமையப்போகின்றது.
தொழில் ரீதியில் பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு பெறுவதற்கான வாய்ப்புகள் கூடி வரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது)
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |