சனி கேதுவின் ஷடாஷ்டக யோகம்.. 2024 வரை எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள்
சனி கேதுவால் உருவாகும் ஷடாஷ்டக யோகத்தினால் இந்த ஆண்டு இறுதியில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய ராசிகள் குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
ஷடாஷ்டக யோகம்
ஒருவரின் ஜாதகத்தில் சனி, கேது ஆறு மற்றும் எட்டாம் வீடுகளில் இருக்கும்போது ஷடாஷ்டக யோகம் உருவாகிறது. இதன் போது சில ராசிகளுக்கு மோசமான நிகழ்வுகளும் ஏற்படும்.
ஜோதிடத்தின்படி, சனி தற்போது அதன் மூல திரிகோண ராசியான கும்பத்தில் அமர்ந்துள்ளார். அதே நேரத்தில், கேது கிரகம் கன்னி ராசியில் இருக்கும்.
ரிஷபம்
ஷடாஷ்டக் யோகத்தினால் ரிஷப ராசியினரின் ஆரோக்கியத்தில் பாதகமான நிலை ஏற்படும். உடல் ரீதியாக மட்டுமின்றி, மன மற்றும் நிதி ரீதியாகவும் பிரச்சினை ஏற்படும். வார்த்தைகள் உறவுகளில் மோசமான விளைவு ஏற்படும் என்பதால் எச்சரிக்கையாக செயல்பட வேண்டும்.
விருச்சிகம்
விருச்சிக ராசியினர் ஷடாஷ்டக் யோக காலத்தில் விவாதங்களை தவிர்க்க வேண்டும், தேவையற்ற செலவுகளால் பாதிக்கும் நிலை ஏற்படுவதுடன், உடல் நல விடயத்திலும் சற்று கவனம் தேவை.
மீனம்
மீன ராசியினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். உடல் நிலையில் அக்கறை, சட்ட சம்பந்தமாக வேலையில் தோல்வி ஏற்படலாம். வாகனம் ஓட்டும் போது விபத்து ஏற்பட வாய்ப்பு இருப்பதால் சற்று எச்சரிக்கையாக இருக்கவும். குடும்பத்திலும் சில கருத்து வேறுபாடு ஏற்படலாம்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |