2024 ஆம் ஆண்டு புற்றுநோய்க்கு தீர்வு கண்டுப்பிடிக்கப்படும்...! பாபா வங்காவின் கணிப்பு
2024 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் கணிப்பு தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பாபா வங்கா
பாபா வங்கா பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த பாபா வங்கா சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.
கண் பார்வையை இழந்த பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படகிறது. பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்பட்டு வருகிறார். பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் தேதி மரணம் அடைந்தார்.
பாபா வங்காக உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படியே நடந்தேறியுள்ளது. இதனால் இவருடைய கணிப்புகள் மக்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பையும் நம்பிக்கையையும் பெற்று வருகின்றன.
குறிப்பாக செர்னோபில் அணு உலை விபத்து, பிரிட்டன் இளவரசி டயானா மரணம், சோவியத் யூனியன் கலைப்பு, அமெரிக்காவில் இரட்டை கோபுர தாக்குதல், கறுப்பின அதிபர், பிரிஸிட் போன்றவை பாபா வங்காவின் கணிப்புகளை நிஜமாக்கியுள்ளன.
இதன்காரணமாக உலகின் பெரும்பாலான மக்கள் இவருடைய கணிப்புகளை உற்று நோக்கி வருகின்றனர். 2023 ஆம் ஆண்டு குறித்து பாபா வங்கா கூறிய கணிப்புகளும், கொஞ்சம் கொஞ்சமாக அரங்கேறி வருகிறது. அதன்படி வளர்ந்த நாடு ஒன்று அணு ஆயுத தாக்குதலில் ஈடுபடும் என்று தெரிவித்திருந்தார்.
அதற்கு ஏற்றது போல் ரஷ்ய உக்ரைன் போர் மற்றும் ரஷ்ய அதிபர் புடின் அணு ஆயுத தாக்குதல் நடத்தப்படும் என எச்சரித்து வருவது பாபா வங்காவின் கணிப்போடு ஒத்துப்போகிறது. அவரது கணிப்புப்படியே பிரிட்டன் ராணியின் மரணமும் நிகழ்ந்தது.
இந்நிலையில் 2024 ஆம் ஆண்டுக்கான பாபா வங்காவின் கணிப்பு குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதன்படி 2024 க்கான பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்களில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் புற்றுநோய்க்கான தீர்வு 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும் என பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2024 இல் உலகம் ஒரு பெரிய மாற்றத்தை சந்திக்கும் என்றும் பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த ஆண்டு குவாண்டம் கணினிகளின் வளர்ச்சியில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்கள் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவரின் கணிப்பில் 85 வீதம் சரியாக நடக்கும் என்பது சான்றுகளுடன் நிரூபிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |