உங்களிடம் இந்த 2 ரூபாய் நோட்டு இருக்குதா? நீங்களும் லட்சாதிபதி ஆகலாம்
பழைய இரண்டு ரூபாய் நோட்டு உங்களிடம் இருந்தால் இதனை வைத்து 5 லட்சம் சம்பாதிக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.
பழைய ரூபாய் நோட்டு
பழைய பொருட்கள் எதுவாக இருந்தாலும் அதற்கான தேவைகள் அதிகமாகவே இருக்கின்றது. அதிலும் பழைய நாணயம் மற்றும் ரூபாய் நோட்டுகள் என்றால் அதற்கு தனி மவுசு தான்.
நம்மிடம் இருக்கும் இந்த பழைய நோட்கள் மற்றும் நாணயங்களை போட்டி போட்டு வாங்குவதற்கு பல வலைத்தளங்கள் இருக்கின்றது. ஆனால் அந்த நாணயங்கள் அரிய வகையாக இருக்க வேண்டும்.
அதிர்ஷ்டம் இருந்தால் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் நீங்கள் விற்பதன் மூலம் கோடீஸ்வரர் கூட ஆகலாம். நீங்கள் பழைய நாணயங்களையும் நோட்டுகளையும் சேகரித்து வைப்பவராக இருந்தால் உங்களுக்கு அந்த வாய்ப்பு உள்ளது.
இவற்றை விற்பனை செய்ய நீங்கள் எங்கும் அலையாமல், அமர்ந்த இடத்தில் இருந்து கொண்டே ஆன்லைன் மூலமாக விற்கலாம் என்று கூறப்படுகின்றது. அதாவது இந்தியா மார்ட், காயின் பஜார், குயிக்கர், பின்ரெஸ்ட், ஓஎல்எக்ஸ் போன்ற வலைதளங்களில் இதனை விற்பனை செய்ய முடியுமாம்.
லட்சாதிபதியாக என்ன செய்யலாம்?
உலகச் சந்தையில் 2 ரூபாய் தாளுக்கான தேவை அதிகரித்துள்ள நிலையில், அதனை ரூ.5 லட்சம் வரை வாங்க மக்கள் ஆர்வம் காட்டுகின்றனர். உங்களிடம் உள்ள ரூபாய் நோட்டுகளை கீழே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறையில் விற்று லட்சக்கணக்கில் சம்பாதியுங்கள்.
குறித்த 2 ரூபாய் நோட்டை விற்க சில நிபந்தனைகளை கடைபிடிக்க வேண்டும். இந்தக் குறிப்பில் முதலில் வரிசை எண் 786 ஐ எழுதப்பட்டிருக்க வேண்டும். இஸ்லாமிய மதத்தில், 786 எண் கொண்ட நோட்டு மிகவும் புனிதமாகக் கருதப்படுகிறது.
நோட்டின் நிறம் இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்க வேண்டும் மற்றும் ரிசர்வ் வங்கியின் முன்னாள் ஆளுநர் மன்மோகன் சிங்கின் கையெழுத்தும் இருக்க வேண்டும்.
OLX இல் பழைய நோட்டுகளை விற்பது எப்படி?
உங்கள் OLX இணையதளத்தை ஓபன் செய்யது, அதில் நீங்கள் விற்பனையாளராக பதிவு செய்ய வேண்டுமாம்.
குறித்த நோட்டின் இரண்டு பக்கங்களையும் புகைப்படம் எடுத்து, குறித்த இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.
பின்பு உங்களது மொபைல் எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியை கொடுத்தால், குறித்த ரூபாய் நோட்டு தேவைப்படுபவர்கள் உங்களை தொடர்பு கொள்வார்கள் என்று கூறப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |