அடுத்த வாரம் வரும் சைத்ர நவராத்திரி; விரதம் இருப்பது எப்படி?
இந்து மக்களின் சிறப்பான பண்டிகைகளில் இந் நவராத்திரிக்கு மிக்க சிறப்பு காணப்படுகிறது.
அன்னை சக்தியின் ஒன்பது வடிவங்களும் ஒன்பது நாட்களில் வழிப்படப்படும். இந்த நவராத்திரியில் பங்குனி மாதத்தில் வரும் நவராத்திரிக்கு ‘லலிதா நவராத்திரி' வசந்த நவராத்திரி என்றும் சைத்ர நவராத்திரி என்றும் அழைக்கப்படுகிறது.
சைத்ர நவராத்திரியின் இறுதி நாள் ராம நவமி ஆகும். ராமர் பிறந்த நாள் என்பதால் சைத்ர நவராத்திரிக்கு ராம நவராத்திரி என்றும் பெயர்.
இது பங்குனி அமாவாசைக்கு மறுநாள் ஆரம்பிக்கப்படுகிறது. இதையொட்டி,கொழு மற்றும் கலசத்தை அமைப்பதோடு, துர்க்கையின் ஒன்பது வடிவங்களையும் பக்தர்கள் வழிபடுவார்கள்.
நவராத்திரியின் போது துர்க்கையை வழிபடுவதன் மூலமும் விரதம் இருப்பதன் மூலமும் துர்க்கை தேவி அனைத்து துன்பத்தையும் போக்குவார்.
அந்தவகையில் சைத்ர நவராத்திரியை எப்படி கடைப்பிடிக்கலாம் எனவும் கிடைக்கும் சிறப்புகள் பற்றியும் அனுஷ்டிக்க வேண்டிய காலங்கள் குறித்தும் பார்க்கலாம்.
சைத்ரா நவராத்திரி 2024
இந்து மக்களின் நாட்காட்டியின் படி, கலச ஸ்தாபனத்தின் சுப நேரம் ஏப்ரல் 9 ஆம் திகதி காலை 06:11 முதல் 10:23 வரை இருக்கும்.
இந்த நேரத்தில் துர்க்கை அன்னையை வழிப்படலாம்.
சைத்ரா நவராத்திரி சிறப்புகள்
கோடை, குளிர் என பருவ மாற்றங்கள் நிகழ்வதால், பல நோய் தொற்றுகள் ஏற்படுகிறது. இந்த பாதிப்பில் இருந்து மக்களை பாதுகாப்பதற்கு துர்க்கை அன்னையை பூஜை செய்யலாம்.
நவராத்திரி பூஜையை தெய்வங்களும் தேவர்களும் கடைப்பிடிப்பதாக கூறப்படுகிறது. ராவணை அழைத்து சீதையை காப்பாற்றும் போது ராம பிரான், நாரதர் அறிவுரைப்படி நவராத்திரி விரதத்தை கடைப்பிடித்துள்ளார்.
கண்ணனுக்கு ஏற்பட்ட சியமந்தக மணி காரணமாக ஏற்பட தோஷத்தை நவராத்திரி பூஜை செய்து நீக்கியதாகவும் புராணங்கள் கூறுகின்றது.
பாரத போரில் பஞ்சபாண்டவர்கள் வென்றதன் காரணமாகவும் இந்த சைத்ர நவராத்திரியில் பூஜை இருப்பதாக புராணங்கள் தெரிவிக்கின்றது.
நவராத்திரியில் 9 நாட்களும் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அவ்வாறு முடியாதவர்கள் அஷ்டமி நாளில் மட்டுமாவது விரதம் இருக்கலாம்.
துர்க்கை அம்மனின் வாகமான குதிரை இருக்கிறது. நவராத்திரி காலத்தில் துர்க்கை குதிரையில் வருவது நல்ல பலன்களை தருவதில்லை என கூறப்படுகிறது.
மேலும் அயோத்தியில் குழந்தை ராமர் சிலையை பிரதிஷ்டை செய்ததற்கு பிறகு வரும் ராம நவமி என்பதால், இவ்வருடம் கோலாகலமாக கொண்டாடப்படும் மற்றும் சிறப்பு வாய்ந்ததாகவும் காணப்படும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |