2024 ஆம் ஆண்டில் அடுத்தடுத்து காத்திருக்கும் ஆபத்துகள்... பாபா வங்காவின் பகீர் கணிப்பு!
2024 ஆம் ஆண்டிற்கான பாபா வங்காவின் பதற வைக்கும் கணிப்பு தற்போது இணையத்தை ஆக்கிரமித்துவருகின்றது.
பாபா வங்கா
பல்கேரிய நாட்டை சேர்ந்தவர் பாபா வங்கா. 1911ஆம் ஆண்டு வடக்கு மேசிடோனியாவில் பிறந்த பாபா வங்கா சிறுவயதில் கடுமையான புயல் ஒன்றில் சிக்கி கண் பார்வையை இழந்தார்.
கண் பார்வையை இழந்த பாபா வங்காவிற்கு எதிர்காலத்தை கணித்து கூறும் சக்தி கிடைத்ததாக கூறப்படுன்கிறது. பாபா வங்கா, பல்கேரிய நாஸ்டர்டாமஸ் என்றும் அழைக்கப்படுகின்றார்.
பல்கேரியாவின் சோபியா பகுதியில் வசித்து வந்த பாபா வங்கா கடந்த 1996 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 11ஆம் திகதி காலமானார்.
இதுவரை பாபா வங்கா உலக நடப்புகள் குறித்து கணித்து கூறியவைகளில் சுமார் 85 சதவீதம் அப்படி நடந்துள்ளமையால் இந்த ஆண்டுக்கான கணிப்பும் நடக்கும் என்று நம்பப்படுகின்றது.
அந்தவகையில் 2024 ஆம் ஆண்டில் நடக்கும் சில விஷயங்கள் குறித்து பாபா வங்கா சில கணிப்புகளை கணித்து வைத்துள்ளார். அவை தொடர்பாக இந்த பதிவில் பார்க்கலாம்.
2024 ஆம் ஆண்டு பிறந்து நான்கு மாதங்கள் கடந்துவிட்ட நிலையில் உலகம் முழுவதும் பல இடங்களில் அசௌகரியமாக நிலை உருவாகி வருகின்றது.
கடந்த செப்டம்பர் 11, 2001 இல் அமெரிக்காவில் நடந்த உலக வர்த்தக மைய பயங்கரவாத தாக்குதல், செர்னோபில் பேரழிவு மற்றும் இளவரசி டயானாவின் மரணம் ஆகியவை தொடர்பிலும் பாபா வங்கா முன்னரே கணித்திருந்தார்.
அதன்படி 2024-ல் இயற்கை சீற்றங்கள் மற்றும் தீவிர வானிலை மாற்றங்கள் ஏற்படும் என பாபா வங்காவின் கணிப்பு குறிப்பிடுகின்றது.
உலக வெப்ப அலைகளின் அதிர்வெண் 67 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அறிவியல் முன்னேற்றங்களில் வெளியிடப்பட்ட அறிக்கை கூறுகிறது.
அதன்படி 2024 க்கான பாபா வங்காவின் தீர்க்கதரிசனங்களில் பூகம்பம், தீ மற்றும் வெள்ளம் போன்ற பல பேரழிவுகள் ஏற்படும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
மேலும் புற்றுநோய்க்கான தீர்வு 2024 ஆம் ஆண்டில் கண்டுபிடிக்கப்படும் என பாபா வங்காவின் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2024 ஆம் ஆண்டு வெப்ப சாதனையை முறியடிக்கும் என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது. 1996 இல் பாபா வங்கா இறந்தபோது, இன்டர்நெட் அதன் ஆரம்ப நிலையில் இருந்தது. ஆனால், அதைப் பற்றியும் அற்புதமான கணிப்புகளை அவர் வெளியிட்டுள்ளார்.
அதில் சைபர் தாக்குதல்கள் அதிகரிக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.முக்கியமான உள்கட்டமைப்பு மீதான இந்த தாக்குதல்கள் சர்வதேச பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
உலகப் பொருளாதார சக்தியின் கட்டமைப்பு மாறும் என்றும், உலக நாடுகளிடையே அரசியல் பதட்டங்களும் கடன்சுமைகளும் அதிகரிக்கும் எனவும் அவரின் கணப்பில் குறிப்பிடப்படுகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |