2022- ம் ஆண்டு பலன்கள்; மகர ராசியில் சூரியன் புதன் சனி கூட்டணி.. இந்த 4 ராசிக்கு காத்திருக்கும் அதிர்ஷ்டம்!
மகர ராசியில் ஏழரை சனி நடக்கிறது. 2022-ம் ஆண்டு இந்த ராசியில் மூன்று கிரகங்கள் ஒன்று சேரும். சூரியன், சனி, புதன் மகர ராசிக்கு வருவதால் மூன்று கிரகங்களின் சேர்க்கையினால், பாதிப்பு உண்டாகும்.
ஆனால், ஜனவரி 5-ம் தேதி புதனும் ஜனவரி 14-ம் தேதி சூரியனும் இந்த ராசிக்குள் நுழைவதால்,. இந்த மூன்று கிரகங்களின் சேர்க்கையின் யோகம் 4 ராசிக்காரர்களை அதிகம் பாதிக்கும்.
கன்னி
கன்னி ராசியினர்கள் உணவில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டுமாம். இதை தவிர பணப்பரிவர்த்தனையில் கவனமாக இருக்கவேண்டும். மேலும், வாகனம் ஓட்டுகையில் கவனம் தேவை. குடும்பத்தில் பெற்றோரின் ஆரோக்கியத்தில் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும்.
துலாம்
துலாம் ராசியினர்களுக்கு மனரீதியான பிரச்சனைகளை சந்திக்க வேண்டி வரும். இது தவிர, வாழ்க்கைத் துணையுடன் கருத்து வேற்றுமை ஏற்படலாம். அதனால் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். காதல் வாழ்க்கையிலும் பிரச்சனைகள் வரலாம்.
தனுசு
தனுசு ராசியினர்களுக்கு திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாகத் தான் இருக்கும். இருப்பினும், உடல்நிலையில் பாதிப்பு ஏற்படலாம். ஆனால் மறுபுறம், குழந்தைகளின் படிப்பு, வேலை தொடர்பாக சில நல்ல செய்திகளைக் கேட்பீர்கள். குடும்பத்தில் குழந்தைகள் மீது சிறப்பு கவனம் தேவை.
மகரம்
மகர ராசியினர்களுக்கு வாழ்க்கையில் கடினமான காலங்கள் வரும். எந்தவொரு செயலிலும் வெற்றி பெற, நீங்கள் கடினமாக உழைக்க வேண்டும்.
மாணவர் வர்க்கத்தினருக்கு படிப்பில் ஆர்வம் இருக்காது. ஆரோக்கியத்திலும் கவனமாக இருக்க வேண்டும். இது தவிர பணப் பிரச்சனையையும் சந்திக்க வேண்டி வரும்.