பல எதிர்பார்ப்புகளுடன் பிரம்மண்டமாக ஆரம்பமாகும் காற்பந்து உலக கோப்பை - FIFA 2022
22 ஆவது காற்பந்து உலக கோப்பை தொடர் மிக பிரம்மண்டமாக நடத்த இருக்கும் கட்டார் உலகில் மிக சரித்திரமிக்க வரலாற்று சாதனைகளை தன்வசமாக்கியுள்ளது.
ஆசியாவில் கிரிக்கெட்டுக்கு எந்த அளவு ஆதரவு இருக்கிறதோ அதை விட அதிகமாகவே உலக அளவில் மிக பெரிய ரசிகர் பட்டாளத்தை காற்பந்து கொண்டுள்ளது.
இந்த ரசிகர்களை உலக அளவில் கொண்டாடும் விதமாக 4 ஆண்டுகளுக்கு ஒருமுறை FIFA எனப்படும் சர்வதேச காற்பந்து சம்மேளனத்தினால் காற்பந்து உலக கோப்பை நடத்தப்படுகிறது.
உலக கோப்பை போட்டிகள் நடைபெறும் மைதானங்கள்
- லுசைல் ஸ்டேடியம் (கொள்ளளவு- 80,000)
- அல் பேத் ஸ்டேடியம் (கொள்ளளவு- 60,000)
- ஸ்டேடியம் 974 (கொள்ளளவு- 40,000)
- கலீஃபா சர்வதேச அரங்கம் (கொள்ளளவு- 45,416)
- எஜுகேஷன் சிட்டி ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
- அல் துமாமா ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
- அல் ஜனுப் ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
- அகமது பின் அலி ஸ்டேடியம் (கொள்ளளவு- 40,000)
12 நாட்கள் நீடிக்கும் குழு சுற்றுப் போட்டிகளின்போது, ஒவ்வொரு நாளும் நான்கு போட்டிகள் நடைபெறும்.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் கடைசி 16 அணிகள் மோதும் கட்டத்திற்கு முன்னேறும்.