மகளின் திருமணத்திற்கு ரூபாய் நோட்டில் அழைப்பிதழ்! தந்தையின் செயலால் ஆச்சரியத்தில் உறவினர்கள்
இந்தியா பணம் 2000 ரூபாய் நோட்டு போன்று திருமண அழைப்பிதழ் செய்து திருமணத்திற்கு அழைத்த தம்பதிகளின் தகவல் இணையத்தை வட்டாரமிட்டுக் கொண்டிருக்கிறது.
திருமணம்
பொதுவாக திருமணம் செய்து பெரியவர்கள் அனைவரும் ஒன்றுக்கூடி, கணவன், மனைவியாக்கும் ஒரு கலாச்சார நிகழ்வாகும்.
இதன்படி, இந்தியாவிலுள்ள ஆந்திர மாநிலத்தில் கிழக்கு கோதாவரி மாவட்டத்தை சேர்ந்தவர் வெங்கடேஷ் என்ற நபரின் இளைய மகளுக்கு திருமணம் செய்ய முடிவுச் செய்து, திருமணத்திற்கான மாப்பிளை தேடிக் கொண்டிருந்துள்ளார்.
இதனை தொடர்ந்து எப்படியோ ஒரு ஆண்மகனை முடிவுச் செய்து மகளுக்கு ஒரு மணமகனை தெரிவு செய்து திருமணங்கள் நிச்சயமாகியிருக்கிறது.
இந்த நிலையில் தன்னுடய மகளின் திருமணத்தை சற்று வித்தியாசமாக ஆக்க முடிவு செய்த வெங்கடேஷ் அழைப்பிதழை சற்று வித்தியாசமாக வடிவமைத்துள்ளார்.
வித்தியாசமாக அழைப்பிதழ் அடித்துக் கொடுத்த தந்தை
அதனை பார்க்கும் போது இந்தியாவில் பயன்படுத்தப்படும் 2000 ரூபாய் நோட்டை போன்று அதே அளவில் மணமகள்- மணமகன் ஆகியோர் பெயர்களை முன்புறத்தில் அச்சடித்தார். திருமணங்கள் தொடர்பான விவரங்களை அழைப்பிதழின் பின்பக்கத்தில் பதிவு செய்துள்ளார்.
இதனை தொடர்ந்து திருமணத்திற்காக அழைப்பிதலை வழங்க ஆரம்பித்துள்ளார். இதனை வாங்கிய உறவினர்கள் 2000 ரூபாய் நோட்டை வாங்கியதாகவும் தெரிவித்துள்ளார்கள்.
அந்தவகையில் இவர் தன்னுடைய மூத்த மகளின் திருமணத்திற்கான அழைப்பிதழை ஏடிஎம் கார்ட் வடிவில் அடித்துள்ளார் என்பதால் இந்த அழைப்பிதழை பெரியளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள் “இவ்வளவு அறிவான அப்பாவா? என சந்தேகிக்கும் வகையில் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.