பெண் வேடமிட்டு நடனமாடிய 20 வயது இளைஞர்! மேடையிலேயே உயிரிழந்த பகீர் காட்சி
இளைஞர் ஒருவர் மேடையில் நடனமாடிக் கொண்டிருந்த நிலையில் திடீரென சுருண்டு விழுந்த பிறகு அவருக்கு நேர்ந்த விஷயம், கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மேடையில் நடமாடிய இளைஞர்
ஜம்மு பகுதியை சேர்ந்த யோகேஷ் குப்தா என்ற இளைஞர் ஒருவர் கணேஷ் உற்சவத்தை முன்னிட்டு பார்வதி அவதாரத்தில் தோன்றி மேடையில் உற்சாகமாக நடனமாடியுள்ளார்.
மிகவும் அசத்தலாக நடனமாடிக் கொண்டிருந்த இளைஞர் யோகேஷ் குப்தா, திடீரென பார்வையாளர்கள் முன்னிலையில் மயங்கி விழுந்துள்ளார்.
இதனைக் கண்டதும் அங்கிருந்த பார்வையாளர்கள் அனைவரும் இது ஆட்டத்தின் ஒரு பகுதி தான் எண்ணிக் கொண்டு காத்திருக்கவும் செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றது.

பரிதாபமாக உயிரிழந்த சோகம்
நேரம் அதிகமாகியும் எழும்பாத நிலையல், மேடையில் இருந்த நபர் மற்றும் பார்வையாளர்கள் பலரும் யோகேஷ் குப்தாவை மேடைக்கு சென்று எழுப்பும் முயற்சியை செய்துள்ளனர்.
ஆனால் அப்போதும் அவர் எழுந்திருக்காததால் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளனர்.
அங்கே யோகேஷ் குப்தாவை பரிசோதித்த மருத்துவர்கள், அவரை மாரடைப்பு காரணமாக ஏற்கனவே இறந்து விட்டதாகவும் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த சம்பவம், பலருக்கும் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மிகவும் இளம் வயதிலேயே இளைஞர் ஒருவர் மாரடைப்பு ஏற்பட்டு மேடையில் நடனமாடும் போதே உயிரிழந்த சம்பவம், கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தி வரும் நிலையில், அவர் நடனம் ஆடிக் கொண்டிருந்த வீடியோவும் தற்போது இணையத்தில் வெளியாகி பலரையும் பதற்றம் அடைய செய்துள்ளது.