பயனுள்ள பாட்டி வைத்தியங்கள்... சாதாரண உடல் பிரச்சனைகளுக்கு வீட்டிலேயே செய்யலாம்
குளிர்காலத்தில் ஏற்படும் உடல்நலக் கோளாறுகள், சளி, காய்ச்சல், ஜீரணப்பிரச்சனை என 20க்கும் மேற்பட்ட தொந்தரவுகளுக்கு பாட்டி வைத்தியம் என்ன என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தற்போதைய குளிர்காலத்தில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சளி, இருமல், காய்ச்சல் இவற்றினால் அவதிப்படுகின்றனர். இதனை சரிசெய்வதற்கு மருத்துவமனையும், மருந்தகங்களையும் தேடியே செல்கின்றோம்.
ஆனால் பாட்டி காலத்தில் சில வைத்திய குறிப்புகள் இன்றைய தலைமுறையினருக்கு அவ்வளவாக தெரிவதில்லை. அந்த வகையில் வீட்டில் உள்ள பொருட்களை மட்டும் வைத்து பயனுள்ள 20 பாட்டிய வைத்திய குறிப்பினை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

இஞ்சி கஷாயம் – சளி, இருமல் குறைய
தேன் + மிளகு தூள் – தொண்டை வலி நிவாரணம்
துளசி சாறு – காய்ச்சல், சளி குறைய
சீரகம் கஷாயம் – செரிமான கோளாறு சரியாக
வெந்தயம் ஊறவைத்த நீர் – சர்க்கரை அளவு கட்டுப்பாடு, முடி ஆரோக்கியம்
மஞ்சள் பால் – உடல் வலி, காயம் ஆற

கஸ்தூரி மஞ்சள் + தேங்காய் எண்ணெய் – முகப்பரு குறைய
கரிசலாங்கண்ணி கீரை – கண் பார்வை மேம்பட
நெல்லிக்காய் சாறு – நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க
பூண்டு பச்சையாக – ரத்த அழுத்தம் குறைய
கறிவேப்பிலை சாறு – முடி உதிர்வு குறைய
அஜ்வைன் (ஓமம்) நீர் – வயிற்று வலி, வாயு பிரச்சனை
சுக்கு + மிளகு கஷாயம் – சளி தொல்லை குறைய

வேப்பிலை சாறு – தோல் நோய்கள், ரத்த சுத்தி
பனங்கற்கண்டு + சுக்கு – இருமல், சளி நிவாரணம்
வாழைப்பழம் – மலச்சிக்கல் தீர
மோர் + இஞ்சி – செரிமானம் சீராக
கற்றாழை (அலோவேரா) ஜெல் – தோல் எரிச்சல், காயம் ஆற
சீரக நீர் காலை வெறும் வயிற்றில் – உடல் எடை கட்டுப்பாடு
புதினா சாறு – வாந்தி, தலைவலி குறைய
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |