ராட்சத பாம்பிடம் அசால்ட்டாக விளையாடும் 2 வயது சிறுவன்: நடுங்க வைக்கும் காட்சி
ராட்சத பாம்பு ஒன்றிடம் 2 வயது சிறுவன் பயமின்றி விளையாடும் காட்சி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
ஆஸ்திரேலியாவில் மான்ஸ்டர் க்ரோக் ராங்லர் மாட் ரைட் (Monster Croc Wrangler Matt Wright) என்பவரின் இரண்டு வயது மகன் பேஞ்சோ வீட்டிற்கு வெளியே இவ்வாறு விளையாடியுள்ளார்.
கடந்த 20 ஆண்டுகளாக, மாட் ரைட் ஆஸ்திரேலியாவின் வடக்கு பகுதி முழுவதும் முதலைகளைப் பிடித்து அதனை வேறு இடத்தில் விடும் வேலையில் பணியாற்றி வருகிறார்.
இன்ஸ்டாகிராமில் இவர் வெளியிட்ட காட்சியில், மேட்டின் மகன் பான்ஜோ, பாம்பின் வாலைப் பிடிப்பதையும் இழுப்பதையும் காணலாம். இதுமட்டுமின்றி, குழந்தை பாம்பின் மிக அருகில் செல்ல முயன்றபோது, மாட் அவரைத் தள்ளிவிடுவதையும் பார்க்க முடிகிறது.
மாட் தனது மகன் பாஞ்சோவுக்கு பாம்பை பார்த்து பயமில்லாமல் இருக்கவும், பாம்புகளை கட்டுப்பாட்டில் வைத்து இருக்கவும் கற்றுக்கொடுத்துள்ளார் என்பது இக்காட்சியிலேயே நன்றாக தெரிகின்றது.