உடல் முழுவதும் சிகரெட்டால் சுடப்பட்டு நள்ளிரவில் துடித்த 2 வயது சிறுமி: பின்னணியில் அரங்கேறிய கொடுமை என்ன?
கர்நாடகாவில் உயிருக்கு ஆபத்தான நிலையில் இரண்டு வயது சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு ஏழு நாட்களுக்கு பின்பு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அதானி தாலுக்கா ஹல்யால் என்ற கிராமத்தில் கடந்த 24 ஆம் தேதி விவசாயி ஒருவர் தனது நிலத்தில் சிறுகுழந்தையின் முனகல் சத்தம் கேட்டு சென்று பார்த்துள்ளார்.
அப்பொழுது இரண்டு வயது சிறுமி ஒருவர் உடல் முழுவதும் பலத்த காயத்துடன் துணியால் சுற்றப்பட்டு காணப்பட்டுள்ளது. அக்குழந்தையின் உடம்பில் சிகரெட்டால் வைத்து சுடப்பட்ட தீ காயங்கள், அந்தர பகுதி உட்பட அனைத்து பகுதிகளிலும் காணப்பட்டுள்ளது.
உடனே பொலிசாருக்கு விவசாயி தகவல் தெரிவித்ததையடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த பொலிசார் குழந்தையை மீட்டுமருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்துள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் ஏழு நாட்கள் சிகிச்சை பெற்று வந்த சிறுமி இறுதியில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
அடையாளம் தெரியாத சிறுமியின் புகைப்படத்தை ஏற்கனவே கர்நாடக காவல்துறையினர் கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா மற்றும் மகாராஷ்டிரா மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களுக்கு அனுப்பிவைத்து எந்த பகுதியை சேர்ந்தவர் என்பதை கண்டுபிடிக்க பொலிசார் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
மேலும் சிறுமியை பரிசோதனை செய்த மருத்துவர்கள் வன்கொடுமை ஏதும் செய்யப்படவில்லை என்று தெரிவித்துள்ளனர். ஆனால் குழந்தையின் உடல் முழுவதும் பாதாம் எண்ணெய், கற்பூரம் இருந்துள்ளது.
இதனால் பில்லி சூனியம் செய்பவர்கள் இந்த பொருட்களை பயன்படுத்துவர் என்றும் இதனால் இந்த குழந்தையை பயன்படுத்தி மர்ம நபர்கள் செய்வினை போன்ற காரியங்களில் ஈடுபட்டு இருக்கலாம் என்ற கோணத்தில் காவல்துறையினர் விசாரணையை தீவிர படுத்தியுள்ளனர்.