சிறுவனை நோக்கி படையெடுத்த ராட்சத பாம்புகள்! கடைசியில் நடந்த ட்விஸ்ட்
இரண்டு ராட்சத மலைப்பாம்புகள் சிறுவன் ஒருவனை படையெடுக்கும் காட்சி இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சில நொடிகள் கொண்ட இக்காட்சியினை அவதானிக்கும் போது, பார்வையாளர்களுக்கு பீதியே ஏற்படுகின்றது. குறித்த காட்சியி்ல் ஒரு சிறுவன் மரத்தடியில் வசதியாக அமர்ந்திருப்பதையும், அப்போது திடீரென இரு மலைப்பாம்புகள் அவன் முன் வருவதையும் காண முடிகின்றது.
மலைப்பாம்பின் நீளம் 15 அடிக்கும் அதிகமாகவும், எடை 100 கிலோவுக்கும் அதிகமாகவும் இருக்கும் என வீடியோவைப் பார்த்தால் தெரிகிறது. ஆரம்பத்தில் இரண்டு மலைப்பாம்புகளும் குழந்தைக்கு தீங்கு விளைவிக்குமோ என்ற சந்தேகத்துடன் பார்வையாளர்கள் கலங்கியும் உள்ளனர்.
ஆனால் ராட்சத மலைப்பாம்புகள் அந்த சிறுவனுக்கு எந்த தீங்கையும் விளைவிக்கவில்லை. மாறாக, சிறுவனின் மடியில் ஒரு பாம்பு தன் தலையை வைத்துக்கொள்கிறது. மற்றொரு பெரிய பாம்பும் சிறுவனுக்கு பின்னால் அமர்ந்திருப்பதையும் காண முடிகிறது.
சிறுவன் சிறு குழந்தையை சீராட்டுவது போல, தன் மடியில் தலை வைத்திருக்கும் பாம்பை பாசத்தோடு தடவிக்கொடுப்பதையும் காணொளியில் காண முடிகின்றது.