இறந்த தாயின் சடலுத்துடன் பல நாட்கள் தங்கியிருந்த மகள்கள்.. சோகத்தை ஏற்படுத்திய அதிர்ச்சி சம்பவம்!
இறந்த தாயின் உடல் அருகில் இரண்டு மகள்கள் பல நாட்கள் இருந்து உடல் மெலிந்து காணப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
வடமேற்கு பிரான்சில், அடுக்குமாடி குடியிருப்பில் தாய் இறந்துள்ள நிலையில், அவருடைய மகள்கள் 5 மற்றும் 7 வயது உடையவர்கள் பல நாட்கள் தாயின் உடலுடனே இருந்துள்ளனர்.
இதனால், அவர்கள் தொடர்ந்து பள்ளிக்கு வராததால் பள்ளி நிர்வாகம் புகார் அளித்ததை அடுத்து, குடியிருப்பு சென்ற போலீசாருக்கு அதிர்ச்சியை தந்துள்ளது. அதன்பின்னர் போலீசார் சிறுமிகளை மீட்டு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
அங்கு அவர்களுக்கு உளவியல் ஆலோசனை வழங்கப்பட்டு பராமரிப்பில் உள்ளனர்..
இறந்த தாயுடன் அவர்கள் குடியிருப்பில் எவ்வளவு நாட்கள் இருந்தார்கள் என்பது இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. சில நாட்கள் காத்திருந்து பின்னர் சிறுமிகளிடமிருந்து சாட்சி பெற இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.