முடியால் கதறிய மாடல் அழகி... அதிகமாக முடிவெட்டியதற்கு சலூன் கடைக்கு 2 கோடி அபராதம்!
மாடலிங் அழகிய பெண்ணின் முடியை அதிகமாக வெட்டிய சலூன் கடை மீது இளம்பெண் புகார் அளித்து 2 கோடி ரூபாய் விதித்துள்ள சம்பவம் டெல்லியில் அரங்கேறியுள்ளது.
இந்தியாவில், டெல்லியை சேர்ந்தவர் இளம்பெண் தாரா சரண். இவர் ஒரு மாடலிங் அழகியா உள்ளார். இதையடுத்து, கடந்த சில மாதங்களுக்கு முன்பு தனியார் சலூன் கடைக்கு சென்று முடிதிருத்தம் செய்துள்ளார்.
அப்போது, தான் மாடலிங் துறையில் இருப்பதாகவும், கவனமாக முடித்திருத்தம் செய்யுங்கள், அதிகமான அளவு முடியை வெட்டி விடாதீர்கள் எனவும் தெரிவித்துள்ளார்.
அங்கிருந்த ஊழியரும் சரி என்று கூறி முடித்திருத்தம் செய்ய ஆரம்பித்துள்ளனர்,. இதனிடையே, கண்களை மூடி பாட்டு கேட்டுக்கொண்டிருந்த தாரா, குறிப்பிட்ட நேர இடைவெளியில் கண்களைத் திறந்து பார்த்தபோது, தான் கூறிய அளவை விட அதிகப்படியான முடியை வெட்டியிருப்பது கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.
இதனால், தான் கூறியதை விட ஏன் அதிகமான அளவு முடியைக் குறைத்தீர்கள் என்று கடை ஊழியரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த ஊழியர் சரியான பதில் கூறாத நிலையில், அங்கிருந்து கிளம்பி வீட்டிற்கு வந்துள்ளார்.
முடி வெகுவாக குறைக்கப்பட்டதால், அவரது மாடலிங் வாய்ப்புகள் அடுத்தடுத்த நாட்களில் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் இதுதொடர்பாக நுகர்வோர் ஆணையத்திடம் முறையிட்டார் தாரா சரண். வழக்கை விசாரித்த ஆணையம் தவறு செய்த சலூன் கடைக்கு 2 கோடி ரூபாய் அபராதம் விதித்துள்ளது. இச்சம்பவம் பெரும் அதிர்ச்சியையே ஏற்படுத்தி இருக்கிறது.