2-2-2 எடை குறைப்பு என்றால் என்ன? ட்ரெண்டிங்கில் இருக்கும் Weight loss Method
பொதுவாக தற்போது அநேகமானவர்கள் எடை அதிகரிப்பு பிரச்சினையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதனை குறைப்பதற்காக பல்வேறு உடற்பயிற்சிகள், சமசீரான உணவுகள், பழங்கள் உள்ளிட்டவைகளை தினசரி செய்து வருகிறோம்.
இது போன்று ஒன்று தான் 2-2-2 மெத்தட் .
இந்த மெத்தட் சமீப காலமாக சமூக வலைத்தளங்களில் வைரலாக பேசப்பட்டு வருகிறது.
2-2-2 முறையானது, ஒருவரின் வளர்சிதை மாற்றத்திற்கு பயனுள்ளதாக இருக்கும் என பல கருத்துக்கள் பரவலாக உள்ளது.
அந்த வகையில், 2-2-2 முறை பற்றி தெளிவாக தொடர்ந்து பார்க்கலாம்.
2-2-2 முறை
2-2-2 எடை குறைப்பு நடைமுறையானது, கீட்டோ, இடைப்பட்ட நேரங்களில் சாப்பிடாமல் இருப்பது (Intermittent Fasting), Carbohydrate loading மற்றும் HIIT உடற்பயிற்சிகள் போன்ற பல்வேறு நுட்பங்களை உள்ளடங்குகின்றன.
மேலும், 2-2-2 முறையானது இரண்டு பெரிய பாட்டில்களில் தண்ணீரைக் குடிப்பது, பழங்கள் மற்றும் காய்கறிகள் சாப்பிடுவது மற்றும் இரண்டு வேலை நடைபயிற்சிகளை மேற்கொள்வது தான் என நியூயார்க் போஸ்ட் கூறியுள்ளார்.
அதே போன்று எடையை குறைக்க வேண்டும் என நினைப்பவர்கள் பருகும் தண்ணீரின் அளவு என்பது வானிலை மற்றும் ஒட்டுமொத்த ஆரோக்கியத்தைப் பொறுத்து காணப்படுகின்றன. பழங்கள் மற்றும் காய்கறிகள் உணவு திட்டத்தில் அதிகமாக சேர்த்து கொள்ளும் போது 3 வாரங்களில் எடை குறைந்திருப்பதை அவதானிக்கலாம் என நிபுணர் ஒருவர் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |