173 வகை உணவுகள்! மருமகனுக்கு பரிமாறி அசத்திய மாமியார்
புது மருமகனுக்கு 173 வகை உணவுகளை செய்து மாமியர் அசத்தியுள்ளார்.
ஐதராபாத்தைச் சேர்ந்த ப்ரித்வி குப்தா என்பவர் சங்கராந்தியை முன்னிட்டு மனைவி ஹாரிகாவுடன் கிழக்கு கோதாவரி மாவட்டம் பீமவரத்தில் உள்ள தனது மாமியார் வீட்டிற்கு சென்றுள்ளார்.
அங்கு முதல்முறையாக வீட்டுக்கு வந்த புதுமாப்பிளையை வரவேற்றுக்கும் முகமாக 173 வகையான உணவுகளை தயார் செய்துள்ளார்.
மகளையும், மருமகனையும் ஹாரிகாவின் தந்தை நாக பத்ரிலட்சுமி நாராயணா, தாய் சந்தியா ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.
விருந்து உபசாரம்
உறவினர்கள் உதவியுடன் 173 வகையான உணவுகளை தயார் செய்தார்.
சாதம், பிரியாணி, புளியோதரை, தக்காளி சாதம், எலுமிச்சை சாதம், அவியல், கூட்டு, பொரியல், அப்பளம், வடகம் வடை, பாயாசம், ஜிலேபி, மைசூர் பாக்கு, லட்டு, பூந்தி, வெற்றிலை பஜ்ஜி, கீரை வடை, வெங்காய வடை, வெங்காய பஜ்ஜி, தயிர் மோர் என்று அந்த பட்டியல் நீண்டுள்ளது.
புது மருமகன் 173 வகை உணவுகளிலும் கொஞ்சம் கொஞ்சம் எடுத்து ருசி பார்த்துள்ளார்.
வீடியோ வைரல்
இது குறித்த வீடியோ ஒன்று சமூகவலைத்தளங்களில் வைராகியு்ளளது.
இதனை பார்த்த நெடிசன்கள் தங்களுக்கு இப்படி ஒரு மாமியர் கிடைக்கவில்லை என்று தங்களது கமண்ட்டுகளை கூறிவருகிறார்கள்.
இந்த வீடியோ இப்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.