இளைஞரிடமிருந்து தப்பிக்க 17 வயது சிறுமி செய்த காரியம்: பரிதாபமாக உயிரிழந்த சோகம்
வன்கொடுமை செய்ய வந்த வாலிபரிடமிருந்து தப்பிக்க நினைத்த சிறுமி ஒருவர் தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரு புறநகர் மாவட்டம் ஒசக்கொட்டை தாலுகாவில் உள்ள கிராமத்தில் 17 வயது சிறுமி பெற்றோர் வெளியே சென்றிருக்கும் நிலையில் கடந்த இரண்டு தினங்களுக்கு முன்பு வீட்டில் தனியாக இருந்து இருக்கிறார்.
அப்பொழுது விஷமருந்து உயிருக்கு போராடிய நிலையில் இருந்துள்ளார். வெளியே சென்று வீடு திரும்பிய பெற்றோர் உடனே மகளை தூக்கிக்கொண்டு மருத்துவமனைக்கு சென்று தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதுகுறித்து பொலிசார் வழக்குப்பதிவு செய்து சிறுமியின் தற்கொலைக்கு என்ன காரணம் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சிறுமியின் வீட்டில் நடத்திய சோதனையில் அச்சிறுமி தற்கொலைக்கு முன்பாக எழுதி வைத்திருந்த கடிதம் சிக்கியது. அந்தக் கடிதத்தில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் சுப்பிரமணியா என்னை வன்கொடுமை செய்ய முயன்றார்.
ஆனால் அவரிடமிருந்து நான் தப்பித்து வந்த நிலையில், இந்த சம்பவத்தினை அவரது நண்பர்களிடம் கூறி வருகின்றார். இதனால் தனக்கு அவமானமாக இருப்பதால் இதிலிருந்து விடுபட தற்கொலை செய்வதாகவும், தனது மரணத்திற்கு காரணம் சுப்பிரமணியா தான்... அவருக்கு சிறை தண்டனை கிடைக்க வேண்டும் என்று எழுதியிருக்கிறார்.
தற்போது தலைமறைவாக இருக்கும் குறித்த இளைஞரை பொலிசார் தீவிரமாக தேடி வருகின்றனர்.