6 நாட்களாக காட்டில் இருந்த சிறுவன்... கடைசியில் நடந்த டுவிஸ்ட்
ஆஸ்திரேலியாவில் 17 வயது சிறுவன் காட்டிற்குள் காணாமல் போன நிலையில் ஆறு நாட்களுக்கு பின்பு உயிருடன் மீட்கப்பட்டுள்ளார்.
காணாமல் போன சிறுவன்
ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாநிலத்தில் அடர்ந்த காட்டுப்பகுதியில் 17 வயது சிறுவன் ஒருவன் ஆறு நாட்களாக காணாமல் போயுள்ளார்.
வில்லியம் என்று அடையாளம் காணப்பட்ட அந்த சிறுவன் தனது நண்பர் ஒருவருடன் முகாமிடுவதற்கு சென்ற போது காணாமல் போயுள்ளார். மெல்பேர்னுக்கு கிழக்கே சுமார் 180 கிலோ மீற்றர் தூரத்தில் உள்ள காட்டுப்பகுதி ஆகும்.

இரவு நேரங்களில் நிலவிய அதிகமான குளிர் காரணமாக சிறுவனின் பாதுகாப்பு குறித்து அதிகாரிகள் கவலையடைந்த நிலையில், மோப்ப நாய்கள், நீர்மூழ்கிக் குழுவினர், ஹெலிகாப்டர் என பல வழிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.
இந்நிலையில் கடந்த வெள்ளிக்கிழமை காலையில் சிறுவன் உயிருடன் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். பாதுகாப்பு குழுவினர் சிறுவனை மீட்டதும் டோனட் மற்றும் தண்ணீர் கொடுத்து மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.
சிறுவனின் உடலில் சில கீறல்கள் மட்டும் உள்ளநிலையில், ஆரோக்கியமாக இருப்பதாக கூறியுள்ளனர். இதுகுறித்து அவரது தாய் எலிசபெத் கூறுகையில், நலமாக இருக்கின்றார், உடலும் சீராக இருக்கின்றது. உயிருடன் இருப்பது தனக்கு அளவற்ற மகிழ்ச்சி என்றும், இனி வீட்டைவிட்டு வெளியே செல்லவே அனுமதிக்க மாட்டேன் என்று கூறியுள்ளார்.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |