17 வயதில் 52 நாடுகளை தனியாக சுற்றி சாதனை படைத்த சிறுவன் - குவியும் வாழ்த்துக்கள்
விமானத்தில் தனியாக பறந்து வந்து 17 வயது சிறுவன் சாதனை படைத்துள்ளான். பெல்ஜியம் நாட்டை சேர்ந்த இங்கிலாந்து வம்சாவளியை கொண்டவர் தான் மேக் ரதர்போர்ட்(17).
இந்த சிறுவன் பல்கேரியா தலைநகர் சோபியாவில் இருந்து கடந்த மார்ச் மாதம் 23-ந்தேதி மணிக்கு 300 கி.மீ. வேகத்தில் செல்லும் உலகின் அதிவேக அல்ட்ராலைட் விமானங்களில் ஒன்றான 'ஷார்க்' என்கிற விமானத்தில் பயணம் செய்துள்ளான்.

அதன்படி, மேக் ரதர்போர்ட் 3 மாதத்தில் தன்னுடைய லட்சியத்தை நிறைவு செய்ய நினைத்தான். ஆனால், பல இன்னல்களை சந்தித்து போராடி பயணத்தை நீடித்தான்.
இதன்பின், கடந்த 5 மாதங்களில் 5 கண்டங்களில் உள்ள 52 நாடுகளை சுற்றி வந்த மேக் ரதர்போர்ட் கடந்த நாளில் பல்கோரியா தலைநகர் சோபியாவில் விமானத்தை தரையிறக்கி சாதனை பயணத்தை நிறைவு செய்தார்.

இச்சாதனையை வரவேற்க, மேக் ரதர்போர்ட்டை வரவேற்கவும் அவரது சாதனைகளைக் கொண்டாடவும் அவரது குடும்பத்தினர் உள்பட ஏராளமான மக்கள் விமான நிலையத்தில் குவிந்திருந்தனர்.
கூச்சலிட்டும், ஆரவாரம் செய்தும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இதன் மூலம் 15 வயதில் விமானிக்கான உரிமத்தை பெற்று உலகின் இளம் வயது விமானி என்கிற பெருமையை அடைந்த மேக் ரதர்போர்ட் தற்போது 5 மாதங்களில் உலகை தனியாக சுற்றி வந்த இளம் விமானி என்ற சாதனையை படைத்துள்ளார்.
