16 வயதினிலே படத்தில் ஸ்ரீதேவியை ஏமாற்றிய டாக்டரை ஞாபகம் இருக்கா? வைரலாகும் குடும்ப புகைப்படம்
இயக்குனர் பாரதிராஜாவின் முதல் படமான 16 வயதினிலே படத்தில் மருத்துவராக நடித்த நடிகர் சத்யஜித் குடும்ப புகைப்படம் வைரலாகி வருகின்றது.
16 வயதினிலே
தமிழ் சினிமாவின் இயக்கத்தில் இமயமாக இருக்கும் பாரதிராஜா. இவர் இயக்கிய முதல் திரைப்படம் தான் 16 வயதினேலே. இப்படத்தில் நடிகர் ரஜினி, கமல், ஸ்ரீதேவி உட்பட பல நடிகர்கள் நடித்தனர்.
இதில் ரஜினி பரட்டை என்ற கதாபாத்திரத்திலும், கமல் சப்பானி என்ற கதாபாத்திரத்திலும், ஸ்ரீதேவி மயில் என்ற கதாபாத்திரத்திலும் நடித்தனர்.
இதில் மயில் டீச்சராக இருக்கும் நிலையில், இவரை சப்பானி காதலிப்பார். ஆனால் மயில் ஊருக்கு மருத்துவராக வந்த டாக்டர் ஒருவரை காதலிப்பார். ஆனால் அவர் மயிலை ஏமாற்றிவிட்டு சென்றுவிடுவார்.
நடிகர் சத்யஜித்
இப்படத்தில் டாக்டர் கதாபாத்திரத்தில் நடித்தவரின் பெயர் நடிகர் சத்யஜித். இவர் கர்நாடகாவைச் சேர்ந்தவர். திரைப்படக் கல்லூரியில் தங்க பதக்கமும் பெற்றுள்ளார்.
செய்தித்தாளில் ஒருமுறை பாரதிராஜா இவரை பார்த்த பின்பு தான் இப்படத்தில் மருத்துவராக நடிக்க வைத்துள்ளார். இப்படத்தில் இவரது ஆங்கில பேச்சு அசத்தலாகவே இருந்தது.
இப்படத்திற்கு பின்பு சரியான வாய்ப்பு கிடைக்காத நிலையில், சீரியலில் நடித்தார். தற்போது நடிப்பிலிருந்து விலகியுள்ள அவர் தற்போது பேட்டி ஒன்றினை கொடுத்துள்ளார்.
தனது குடும்பத்தை அறிமுகப்படுத்தியுள்ள நிலையில், இவரது மகளுக்கு திருமணம் முடிந்துவிட்டதுடன், மகனுக்கு வன் பார்த்துக் கொண்டுள்ளார்களாம்.
சினிமாவில் நடிக்க வருவதற்கு முன்பே இயக்குனராக வேண்டும் என்ற கனவில் தான் இருந்தாராம். தற்போது அந்த கனவும் 48 ஆண்டுகளுக்கு பின்பு நனவாகியுள்ளதாகவும், கன்னட திரைப்படம் ஒன்றினை இயக்கிக் கொண்டுள்ளாராம்.
இப்படம் விரைவில் தமிழிலும் வெளியாகும் என்று அவர் கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |