சிங்கப்பூரில் உண்ணப்படும் 16 வகையான பூச்சி வகைகள்! இதெல்லாம் சாப்பிடுவாங்களா?
தாய்லாந்து, சீனா, ஜப்பான் போன்ற நாடுகளில் 16 வகையான பூச்சிகளை உண்பதற்கு மட்டுமல்லாமல் அதை விற்பனை செய்யவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
16 பூச்சிகள்
சிங்ப்பூரில் வாழும் பாதி மக்கள் வெளிநாட்டை சேர்ந்தவர்கள். இந்த நாட்டில் இந்தியா, ஜப்பான், சீனா, இந்தோனேசியா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். இதனால் தான் அங்குள்ள உணவு பழக்க வழக்கமும் எல்லா நாட்டு இனத்தவருக்கும் ஏற்ற வகையில் உள்ளது.
அந்த வகையில் இங்கு 16 பூச்சி வகைகள் காணப்படுகின்றது. இதில் கிரிக்கெட் பூச்சி, வெட்டுக்கிளி, பட்டுப்புழுக்கள் உள்ளிட்டவற்றை தாய்லாந்து, சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யவும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் அனுமதி தந்துள்ளது.
இந்த பூச்சிகளில் அதிக புரதச்சத்து காணப்படுகின்றது. இதனால், புரத உணவுகளுக்கு மாற்றாக பூச்சி உணவுகளை ஊக்குவிப்பதாக சிங்கப்பூர் அரசு கூறியுள்ளது. இந்தியாவில் ஈசலை மழைக்காலங்களில் பொறித்து உண்பார்கள்.
இதன் காரணமாக சிங்கப்பூரில் தற்போது எந்த நாட்டவர் சென்றாலும் அவர்களுக்கு ஏற்ற உணவு அங்கே இருப்பது போல அரசு நடவெடிக்கை எடுத்துள்ளது. சிங்கப்பூரில் இப்படி அரசு அனுமதி வழங்கியதற்கான காரணம் வெளிநாட்டவர்களின் சுற்றுலாப்பயணத்தில் உணவு ஒரு தடையாக இருக்க கூடாது என்பதற்காகவும் தான்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |