150 வருடங்களுக்கு பின்னர் உண்டாகும் ராஜயோகம்: வெற்றியை ருசிக்கும் ராசியினர் யார்?
இந்த மார்ச் மாதம் கும்ப ராசியில் சனி செவ்வாய் சுக்கிரன் சேர்க்கை உருவாகிறது. இந்த சேர்க்கை கமார் 150 வருடங்களுக்கு பிறகு வருகின்றது. இந்த சேர்க்கைக்கு பெயர் தான் ராஜயோகம்.
இந்த இணைப்பு அனைத்து ராசிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்தினாலும் குறிப்பிட்ட சில ராசிகளுக்கு இது நல்ல பலனை தரும். இதனால் கடன்கள், சச்சரவுகள் மற்றும் நோய்களிலிருந்து விடுபடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.
150 ஆண்டுகளுக்குப் பிறகு அரிதான சேர்க்கையால் இந்த ராசிக்காரர்கள் அதிக நிதி ஆதாயத்தைப் பெறுவார்கள் அப்படிப்பட்ட அதிஸ்டசாலி ராசிகள் யார் யார் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
1.மேஷம்
மேஷ ராசியின் அதிபதி செவ்வாய் ஆவார். இந்த சனி செவ்வாய் சுக்கிரனின் சேர்க்கையால் தொழிலில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரத்தில் லாபம் உண்டாகும்.
வெளியூர் சம்பந்தமான வேலை செய்பவர்களுக்கு சாதகமாக இருக்கும். திடீரென்று பணவரவு கிடைக்கும். சிரமப்படக்கூடிய நோய் இருந்தால் விட்டு போகும்.
இருந்தாலும் நீங்கள் குழந்தையின் நல விஷயத்தில் மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
2.கன்னி
உண்டாகப்போகும் ராஜ யோகத்தால் நீங்கள் கடனில் இருந்து விடுபடுவதற்கான வாய்ப்பு கிடைக்கும். இதன் பிறகு நீங்கள் நிம்மதியான வாழ்கையை வாழலாம்.
நீங்கள் செய்யும் வேலையில் வெற்றி காண்பீர்கள். வாகனம் செலுத்தும்போது கவனமாக செலுத்த வேண்டும்.
3.தனுசு
இந்த மூன்று கிரகத்தின் சேர்க்கையால் தனுசு ராசியினருக்கு தைரியம் என்பது தாறுமாறாக இருக்கும். இவர்கள் அரசியல் தொழிலில் இருந்தால் இந்த நேரம் சாதகமாக அமைவதுடன் வெற்றியையும் தரும்.
உங்கள் பதவியும் செல்வாக்கும் அதிகரித்து காணப்படும். தனிப்பட்ட செல்வாக்கால் பணம் அதிகரிக்கும்.