உலகில் அழகான கொதிக்கும் வெந்நீர் ஊற்றுக்கள்: வாழ்வில் ஒருமுறையாவது பார்க்க வேண்டிய அழகு

hot water river world hot spring
By Manchu Oct 24, 2021 09:15 AM GMT
Report

உலகில் நாம் நினைத்துக் கொண்டிருப்பதை விட மிகவும் விசித்திரமான நிகழ்வுகளும் நடக்கின்றன என்பதற்கு உதாரணம் தற்போது நீங்கள் தெரிந்து கொள்ளப் போகும் விடயம் தான்.

ஆம் தண்ணீர் ஊற்றுகளை நாம் அனைவரும் அவதானித்திருப்போம். ஆனால் வெந்நீர் ஊற்றுகள் பற்றி அவ்வளவாக கேள்விப்பட்டிருக்க மாட்டோம்.

அவ்வாறான விசித்திரமானதாகவும், மிகவும் அழகானதாகவும் இருக்கும் உலகின் 15 வெந்நீர் ஊற்றுக்களைப் பற்றியும், அவற்றின் சிறப்பினை தற்போது தெரிந்து கொள்ளலாம்.

பமுக்கலே வெந்நீர் ஊற்று (Pamukkale)

துருக்கியில் டெனிஸ்லி மாகாணத்தில் இருக்கும் இந்த வெந்நீர் ஊற்று, 17 அடுக்கு குளங்கள் கொண்ட கனிமங்கள் நிறைந்ததாகும்.

இதில் வெப்பம் 94 டிகிரி பாரன்ஹீட் அளவில் இருக்கும் நிலையில், சுண்ணாம்பு படிவம் அதிகமாக இருப்பதால் வெள்ளை நிறத்தில் காணப்படுவதுடன், நீரூற்று பாயும் இடங்களில் கார்பனேட் கனிமம் அதிகம் காணப்படுகின்றது.

இது மொத்தம் சுமார் 2,700 மீட்டர் நீளமும், 600 மீட்டர் அகலமும், 160 மீட்டர் உயரமும் கொண்டது. இந்த வெப்ப நீரூற்றுகளில் குளிப்பதற்காக பழங்காலத்திலிருந்தே ஏராளமான மக்கள் வந்து செல்கிறார்கள். 1988ஆம் ஆண்டில் யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தளமாக இது இணைக்கப்பட்டது.

கீர்கங்கா வெந்நீர் ஊற்று (Kheer Ganga)

இமாச்சல பிரதேசத்தில் பார்வதி பள்ளத்தாக்கில் உள்ள கீர்கங்கா காடுகளுக்குள் காணப்படக்கூடிய ஒரு அற்புதமான இயற்கையான கந்தக வெந்நீர் ஊற்று.

இது குலு மாவட்டத்தில் 9700 அடி உயரத்தில் உள்ளது. இந்த வெந்நீர் ஊற்றில் இரண்டு குளங்கள் கட்டப்பட்டுள்ளன. ஒன்று ஆண்களுக்கும் இன்னொன்று பெண்களுக்கும் தனித்தனியாக உள்ளது.

கீர்கங்கா மலைகளின் சரிவுகளில் உள்ள ஒரு சிறிய கிராமம். இந்த பகுதியில் பிரபலமான மலையேற்றங்கள் அதிக அளவில் உள்ளதால் சுற்றுலா பயணிகள் அதிகமாகவே வந்து செல்கின்றனர்.

ப்ளூ லகூன் (Blue Lagoon)

ஐஸ்லாந்தில் உள்ள ரெய்காவிக் தலைநகரில் இருந்து சுமார் 50 நிமிட பயணத்தில் இந்த அழகான ப்ளூ லகூனை அடைந்துவிடலாம். இங்குள்ள கருப்பு நீல எரிமலை பாறையில் சிலிக்காவின் தன்மையால் பால் நீல வர்ணத்தில் தண்ணீர் உள்ளது.

இந்த வெந்நீர் ஊற்றில் உள்ள தண்ணீர் 99 லிருந்து 102 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தில் உள்ளது. இந்த நீரில் உப்புக்கள் மற்றும் பாசிகள் நிறைந்து காணப்படுகிறது. இங்கு குளிப்பதற்காக குளியல் வசதிகள் கொண்ட குளம் 1987 ல் தொடங்கப்பட்டது.

இந்த குளத்தில் குளிப்பதற்காக 2017ஆம் ஆண்டில் 1.3 மில்லியன் பார்வையாளர்கள் வந்துள்ளனர். நுழைவு கட்டணம் மூலமாக 102 மில்லியன் டொலர்கள் வருமானம் வந்துள்ளது. நுழைவுக்கட்டணம் 64 டொலரிலிருந்து ஆரம்பமாகிறது.

செனா ஹாட் ஸ்பிரிங்ஸ் (Chena Hot Springs)

செனா ஹாட் ஸ்பிரிங்ஸ் அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள ஃபேர்பேங்க்ஸ் நார்த் ஸ்டார் போரோவில் உள்ளது. இது 1905 ஆம் ஆண்டில் ராபர்ட் மற்றும் தாமஸ் ஸ்வான் என்ற இரண்டு தங்க சுரங்கம் தோண்டும் சகோதரர்களால் கண்டுபிடிக்கப்பட்டது.

இங்கு உள்ள சூடான நீரூற்றுகள் 106 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தை கொண்டுள்ளது. 1911 ஆம் ஆண்டில் பார்வையாளர்களுக்கு தங்குவதற்கு வசதியாக 12 சிறிய அறைகள் அங்கு கட்டப்பட்டுள்ளன.

தற்போது இது அலாஸ்காவில் உள்ள மிகவும் பிரபலமான ரிசார்ட்டுகளில் ஒன்றாக மாறியுள்ளது. இங்குள்ள தண்ணீரில் சோடியம் மற்றும் பைகார்பனேட்டுகள் அதிகம் உள்ளது.

கிராண்ட் பிரிஸ்மாட்டிக் ஸ்பிரிங் (Grand Prismatic Spring)

கிராண்ட் பிரிஸ்மாட்டிக் ஸ்பிரிங் அமெரிக்காவின் வயோமிங்கில் உள்ள யெல்லோஸ்டோன் தேசிய பூங்காவில் உள்ளது. இது சுமார் 370 அடி அகலமும் 160 அடி ஆழமும் கொண்ட உலகிலுள்ள மூன்றாவது மிகப்பெரிய நீரூற்று.

குளத்தின் மையத்தில் இருந்து தண்ணீர் சுமார் 160 டிகிரி பாரன்ஹீட் வெப்பத்தோடு நீலநிறத்தில் வெளி வருகிறது. குளத்தின் கரையில் சிவப்பு, ஆரஞ்சு, மஞ்சள், பச்சை மற்றும் நீல நிறத்தில் வர்ண வளையங்கள் சூழ்ந்து தண்ணீர் காணப்படுகிறது.

அதிக சூடு மற்றும் தாது நிறைந்த இந்த நீரில் செழித்து வளரும் பாக்டீரியா காரணமாக இங்கு குளிக்கவோ நீச்சல் அடிக்கவோ அனுமதி இல்லை.

இந்த வெந்நீர் ஊற்று நிமிடத்திற்கு 2100 லிட்டர் தண்ணீரை 160 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தோடு வெளியேற்றுகிறது. 

டிசப்ஷன் ஐஸ்லேண்ட் (Deception Island)

பனி நிறைந்த அண்டார்டிகாவில் உள்ள இந்த தீவில் உள்ள வெந்நீரூற்று கடற்கரை மணலுக்கு அடியில் காணப்படுகிறது. இது கொஞ்சம் வித்தியாசமான வெந்நீரூற்று. இந்த வெந்நீர் ஊற்று கடற்கரையில் கருப்பு மணலுக்கு அடியில் செல்கிறது.

வெந்நீர் ஊற்றின் வெப்பத்தை உணர்வதற்காக கடற்கரையில் உள்ள கருப்பு மணலைத் தோண்டி எடுத்து அதன் உள்ளே இருக்கக்கூடிய சூடான நீர் ஊற்றுகளில் குளியல் போடலாம்.

இதனுடைய வெப்பம் 158 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும். மிகவும் குளிர்ந்த கடல் நீருடன் இந்த வெப்ப நீரூற்று கலக்கும் பொழுது வெதுவெதுப்பான இயற்கையான குளியல் குளம் குளிக்க கிடைத்துவிடும்.

இங்கு குளிப்பதற்கு எந்த நீர் போதுமான பாதுகாப்பானது என்பதை ஆய்வு வழிகாட்டிகள் தீர்மானிப்பார்கள். அவர்கள் ஆய்வு செய்து நமக்கு தகவல் தெரிவிக்கும் வரை காத்திருக்க வேண்டும்.

ஹுவாங்லாங் தேசிய பூங்கா (Huanglong National Park)

சீனாவின் சிச்சுவான் மாகாணத்தின் வடமேற்கில் உள்ள ஹுவாங்லாங் பள்ளத்தாக்கு முழுவதும் 1992ஆம் ஆண்டிலிருந்து யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய பட்டியலில் இடம் பெற்றுள்ளது.

ஏனென்றால் இந்த பள்ளத்தாக்கு முழுவதும் பாண்டாக்கள் அதிகம் காணப்படுகிறது.மேலும் இந்த இடம் பனிமலைகள், அழகான வன சுற்றுச்சூழல் அமைப்புகள், பனி மூடிய சிகரங்கள், அழகிய நீர்வீழ்ச்சிகள் மற்றும் சூடான வெந்நீர் ஊற்றுகளுக்கும் பெயர் பெற்றது.

இங்குள்ள இந்த தெளிந்த நீர் குளங்கள் 3.5 கிலோ மீட்டர்கள் வரை நீண்டு காணப்படுகிறது. இந்த இடத்தை மொத்தமாக சேர்த்து பார்க்கும் பொழுது பெரிய டிராகன் இருப்பது போல் காணப்படுமாம்.

பஞ்சார் ஹாட் ஸ்பிரிங்ஸ் (Banjar Hot Springs) 

இந்தோனேஷியாவின் பாலியில் அமைந்துள்ள இந்த வெந்நீர் ஊற்று புகழ்பெற்ற பிரம்மா விஹாரா அராமா பவுத்த மடாலயத்திலிருந்து 1.6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது.

இந்த சூடான வெந்நீர் ஊற்றை ஒட்டி ஒரு தனியார் குளம் மற்றும் மிக பிரம்மாண்டமான ஆடம்பரமான குளியலறையான ஜக்குஸி பகுதி, மசாஜ் செய்யும் இடம், ஆடம்பரமான திறந்தவெளி உணவகம் இப்படி பல வசதிகள் இங்கு உள்ளது.

இங்கு இருக்கக்கூடிய இந்த வெந்நீரூற்று மருத்துவ குணம் வாய்ந்ததாக சொல்கிறார்கள். இந்த நீரில் 26 சதவீத கந்தக உள்ளடக்கம் உள்ளது.

100.4 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில் இருக்கக்கூடிய இந்த தண்ணீர் சருமத்தில் இருக்கக்கூடிய அரிப்பு, எரிச்சல், வீக்கம் இவைகளைப் போக்கி சருமத்தை குணமாக்கும் சக்தி கொண்டதாம்.

டெர்மே டி சாட்டர்னியா (Terme di Saturnia)

பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கக்கூடிய டெர்மே டி சாட்டர்னியா இத்தாலியின் தெற்கு டெல்லியில் உள்ள மிகப் பிரபலமான வெந்நீரூற்று கொண்ட சுற்றுலாத்தலம்.

இந்த வெந்நீர் ஊற்று நீர்வீழ்ச்சியாக டிராவர்டைன் பாறைகள் மீது பாய்கிறது. பல நூற்றாண்டுகளாகத் தொடர்ந்து பாய்ந்து சில சிறிய குளங்களை உருவாக்கியுள்ளது. விநாடிக்கு சுமார் 800 லிட்டர் தண்ணீர் வெளிவருகிறது.

சுமார் 99 டிகிரி ஃபாரன்ஹீட் வெப்பம் கொண்டிருக்கக்கூடிய சல்ஃபியூரஸ் அடங்கிய இந்த வெந்நீர் ஊற்று எல்லா வகையான முகப்பருக்களையும் குணமாக்கும் எனச் சொல்லப்படுகிறது.

முகப்பரு இருப்பவர்கள் இங்கு சென்றால் போதும் முகம் அழகாக மாறி விடும் போல. மேலும் பல்வேறு விதமான தெர்மல் சிகிச்சைகளும் இங்கு கொடுக்கப்படுகிறது.

யுனார்டோக் தீவு (Uunartoq Island)

யுனார்டோக் தீவு கிரீன்லாந்தின் தெற்கில் அமைந்துள்ளது. இங்கு ஏராளமான வெப்ப நீரூற்றுகள் உள்ளன. ஆனால் யுனார்டோக் தீவு நீரூற்றுகள் மட்டுமே குளிக்க போதுமான வெப்பமாக இருக்கும் ஒரே இடம்.

குளிர் காலத்தில் உறைபனி மாதங்களில் கூட ஆண்டு முழுவதும் இங்கு தண்ணீர் வெப்பமாக இருக்கும். இங்கு உள்ள தண்ணீரின் வெப்பம் 93 இருந்து 100 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும்.

பிரபல நகரங்களான காகார்டோக் மற்றும் நானோர்டாலிக் நகரங்களில் இருந்து படகு மூலம் இங்கு செல்லலாம். நீரூற்றுகளை சுற்றி இருக்கக்கூடிய பனிப்பாறைகள் மற்றும் மலை உச்சிகளில் இயற்கை அழகுகள் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சிகளாக இருக்கிறது.

இந்த வெந்நீர் ஊற்று உருவானதற்கு ரோமானியர்கள் ஒரு புராணக் கதையையும் உருவாக்கியுள்ளார்கள். வியாழன் மற்றும் சனி ஆகிய இரண்டு புராண தெய்வங்களுக்கு இடையில் மிகப் பெரிய சண்டை மூண்டது.

அப்பொழுது வியாழன் சனியை நோக்கி வீசிய மின்னல் துண்டுகள் தவறி இங்கு வந்து விழுந்து டெர்மே டி சாட்டர்னியா உருவாகியுள்ளது என்ற புராணக் கதையும் உள்ளது.  

குரோகாவா ஆன்சென் (Kurokawa Onsen)

ஜப்பானின் கியுஷுவில் அமைந்திருக்கக் கூடிய குரோகாவா ஆன்சென் மிகப் புகழ்பெற்ற ஜப்பானின் வெந்நீர் ஊற்று.

இந்த வெந்நீர் ஊற்றை ஜப்பானியர்கள் மிக அழகாக கலை நுட்பமாக மாற்றியமைத்து இருக்கிறார்கள். ஜப்பானின் அழகான கலை நுட்பம் கொண்ட கட்டிடங்கள் இங்கு உள்ளது.

டிராவர்டைன் ஹாட் ஸ்பிரிங்ஸ் (Travertine Hot Springs)

இந்த அழகான பாறைகள் சூழ்ந்த டிராவர்டைன் வெந்நீர் ஊற்று கலிபோர்னியாவின் கிழக்கு சியராஸில் அமைந்துள்ளது. இந்த வெந்நீர் ஊற்று நீரின் வெப்பம் 103 டிகிரியில் இருந்து 105 டிகிரி பாரன்ஹீட் வரை இருக்கும்.

இந்த கனிமங்கள் அதிகம் நிறைந்த வெந்நீரூற்று நூற்றுக்கணக்கான ஆண்டுகளாக உள்ளூர் பழங்குடி மக்களாலும் அதன்பிறகு ஆரம்பகால குடியேறிகளாலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

தொல்பொருள் பதிவுகளின் படி பேலியோ இந்தியன்ஸ் பத்தாயிரம் ஆண்டுகளாக இங்கு உள்ள வெப்ப நீரூற்றுக்களை பயன்படுத்தியுள்ளார்கள்.

ஷாம்பெயின் பூல் (Champagne Pool)

நியூசிலாந்தின் வடக்கு தீவில் உள்ள வயோட்டாபுவில் உள்ள ஷாம்பெயின் வெந்நீர் ஊற்று மிகவும் பிரபலமான வண்ணமயமான சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் அற்புதமான ஒரு இடம். 213 அடி அகலம் உள்ள இந்த நீரூற்றில் அதிக அளவு கார்பன் டை ஆக்சைடு வாயு உள்ளது.

இந்த வெந்நீர் ஊற்று சுமார் 165 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையை கொண்டுள்ளது. இதனால் இந்த வெந்நீர் ஊற்றில் யாரும் குளிக்க முடியாது அழகை மட்டுமே அனுபவிக்க முடியும்.

குளத்தினுள் இருக்கக்கூடிய தண்ணீர் நீலப்பச்சை நிறத்திலும் குளத்தை சுற்றி இருக்கும் ஆரஞ்சு வளையம் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கிறது.

டன்டன் வெப்ப நீரூற்று (Dunton Hot Springs)

இந்த அழகான டன்டன் வெந்நீரூற்று கொலராடோவில் 8600 அடி உயரத்தில் உள்ளது. இங்குள்ள வெந்நீரூற்றில் உள்ள தண்ணீர் 85 டிகிரி முதல் 106 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பமாக இருக்கிறது.

இங்குள்ள வெப்ப நீரூற்றுகள் ஆடம்பரமான தங்கும் வசதி கொண்ட வீடுகளாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள ஆடம்பர அறைகள் ஒரு இரவுக்கு ஆயிரம் டாலர்களுக்கு மேல் வாடகைக்கு விடப்படுகிறது.

டெர்மாஸ் ஜியோமெட்ரிகாஸ் (Termas Geométricas)

சிலியின் புக்கோன் பகுதியிலுள்ள வில்லாரிகா தேசிய பூங்காவின் நடுவில் இந்த சூடான நீர் ஊற்று உள்ளது. இங்கு மொத்தம் 17 வெப்ப நீரூற்று குளங்கள் உள்ளது. ஒவ்வொரு குளத்திற்கும் நடந்து செல்வதற்காக சிவப்பு வர்ணத்தில் அழகான நடைபாதையும் அமைத்திருக்கிறார்கள்.

குளிர்ச்சியான தண்ணீரை கொண்டு வரக்கூடிய சிறிய அருவிகளும் இங்குள்ளது. இந்த குளங்களில் உள்ள தண்ணீர் ஆண்டு முழுவதும் 95 லிருந்து 108 டிகிரி பாரன்ஹீட் வெப்ப நிலையில் இருக்கிறது.  

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

உடுவில் தெற்கு, கொக்குவில் கிழக்கு

19 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, கொழும்பு, Markham, Canada

20 Nov, 2026
மரண அறிவித்தல்

வல்வெட்டித்துறை, Basel, Switzerland

19 Nov, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, இராமநாதபுரம், பெரியதம்பனை, Oshawa, Canada

17 Nov, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, தெல்லிப்பழை, Vaddukoddai, Mississauga, Canada

18 Nov, 2026
மரண அறிவித்தல்

முரசுமோட்டை, வவுனியா, Savigny, Melun, France

13 Nov, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
நன்றி நவிலல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொலிகண்டி, வெள்ளவத்தை

03 Dec, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, Toronto, Canada

24 Nov, 2018
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் உரும்பிராய் வடக்கு, Jaffna, Wanstead, United Kingdom

21 Nov, 2021
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், திருவையாறு, பெரியதம்பனை, திருநாவற்குளம்

19 Nov, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, கனடா, Canada

21 Nov, 2016
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, Quincy-sous-Sénart, France

17 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 9ம் வட்டாரம், Southall, United Kingdom

18 Nov, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Surrey, United Kingdom

14 Oct, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்
1ம் ஆண்டு நினைவஞ்சலி
4ம் ஆண்டு நினைவஞ்சலி

தர்மகேணி, கிளிநொச்சி முரசுமோட்டை 3ம் யூனிற், Jaffna, கம்பஹா வத்தளை, நல்லூர்

21 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மரண அறிவித்தல்

Thirunelvely, Lewisham, United Kingdom, Dartford, United Kingdom

15 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, அனலைதீவு, Brampton, Canada

20 Nov, 2021
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், யாழ்ப்பாணம், London, United Kingdom

20 Nov, 2021
12ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

நீராவியடி, காங்கேசன்துறை, திருவையாறு, Basel, Switzerland

22 Nov, 2023
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், நீர்கொழும்பு

20 Nov, 2024
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Trier, Germany

14 Nov, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, முரசுமோட்டை, London, United Kingdom

11 Nov, 2026
அந்தியேட்டி அழைப்பிதழும், நன்றி நவிலலும்

தொண்டைமானாறு, Bandarawela, Gonesse, France

20 Oct, 2026
மரண அறிவித்தல்

குருநகர், கொழும்பு, பிரான்ஸ், France

12 Nov, 2026
மரண அறிவித்தல்

அச்செழு, Colindale, United Kingdom

14 Nov, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய் தெற்கு, London, United Kingdom, கிளிநொச்சி

19 Nov, 2021
மரண அறிவித்தல்

கரணவாய், மானிப்பாய், கொழும்பு, London, United Kingdom

12 Nov, 2026
மரண அறிவித்தல்

சுருவில், ஈச்சமோட்டை, Pickering, Canada

14 Nov, 2026
மரண அறிவித்தல்

வீமன்காமம், Greenford, United Kingdom

10 Nov, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US