14 வயது சிறுமியை 55 வயது முதியவருக்கு திருமணம்: கருவை கலைக்க வந்த போது அம்பலமாகிய உண்மை
தமிழகத்தில் 55 வயதான முதியவருக்கு தனது 14 வயது தாய் திருமணம் செய்து வைத்துள்ள கொடூரம் தற்போது வெளியே அம்பலமாகியுள்ளது.
வேலூர் அடுத்த கருகம்பத்தூர் பகுதியை சேர்ந்த பெண் ஒருவர் தனது கணவரை இழந்த நிலையில் இரண்டாவதாக திருமணம் செய்து கொண்டுள்ளார்.
இவருக்கு 14 வயது மகள் இருந்துள்ள நிலையில், கடந்த மூன்று மாங்களுக்கு முன்பு தனது இரண்டாவது கணவருக்காக அவரது அண்ணன் லோகநாதன் என்ற 55 முதியவருக்கு ரகசியமாக திருமணம் செய்து வைத்துள்ளார்.
இந்நிலையில், சிறுமி கருவுற்றதால், கருவை கலைக்க அவரது தாயார் மருத்துவமனைக்கு அழைத்து வந்த போது, மருத்துவர்கள் விசாரித்துள்ளனர்.
அப்போது சிறுமிக்கு வயதான முதியவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது தெரியவந்துள்ளது. இதையடுத்து மருத்துவர்கள் சமூக நலத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்துள்ளனர்.
விரைந்து வந்த அதிகாரிகள் சிறுமியை அவரது தாயிடமிருந்து மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்ததோடு, சிறுமியின் தாய் மற்றும் முதியவர் லோகநாதனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.