காதலித்து வந்த தாய்... மகன் அனுபவித்த கொடுமை! இறுதியில் பறிபோன உயிர்
தாய் காதலித்து வந்த நபரின் கொடுமை தாங்காமல் மகன் ஒருவர், குத்தி கொலை செய்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் சேர்ந்த 35 வயது பெண் ஒருவர் பத்து ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய கணவரை பிரிந்துவிட்டு 4 வயது மகனுடன் இருந்து வந்துள்ளார்.
பின்பு குறித்த பெண் வசிக்கும் பகுதியில் வேறொருவர் மீது காதல் ஏற்பட்டு அவருடன் வாழ தொடங்கியுள்ளார். நாட்கள் செல்ல செல்ல பெண்ணின் காதலன், அப்பெண்ணையும், அவரது மகனையும் அடித்து உதைத்து உள்ளார்.
தற்போது 14 வயதான அந்த சிறுவன், தந்தையின் காதலனின் தொல்லை தாங்கமுடியாமல் சென்றதால், அவரை கொலை செய்ய திட்டமிட்டுள்ளார்.
பின்பு தனது நண்பர் ஒருவரிடம் சென்று கத்தியை வாங்கியதோடு, துன்புறுத்தி வந்த காதலனையும் தனியாக வரவழைத்து கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். பின்பு உயிர் போய்விட்டதா என்பதை அறிந்து கொள்ள அவரை கடித்தும் பார்த்துள்ளார்.
இதுகுறித்து தகவலறிந்த பொலிசார், கொடூரமான செயலுக்கு பயன்படுத்தப்பட்ட கத்தி மற்றும் ரூ.60 ஆயிரம் மதிப்புள்ள இருசக்கர வாகனத்தினை கைப்பற்றியதோடு, வழக்க பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.