விளையாடிவிட்டு தூங்கிய 13 வயது சிறுமிக்கு நடந்த துயரம்! எச்சரிக்கை மக்களே
தெலுங்கானா மாநிலத்தில் விளையாடி விட்டு தூங்க சென்ற 13 வயது சிறுமி மாரடைப்பினால் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மாரடைப்பால் சிறுமி பலி
சமீப காலமாக மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது மாரடைப்பு. பெரும்பாலான இளைஞர்களும் இதற்கு பலியாகியிருந்த நிலையில், தற்போது சிறுமிகளும் பலியாக ஆரம்பித்துள்ளனர்.
தெலுங்கானா மாநிலத்தில், மஹ்பூபாபாத்தில் உள்ள மரிபெடா மண்டல் என்னும் பகுதியில் அதிகாலையில் 13 வயது சிறுமி மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
ஸ்ரவந்தி(13) என்ற சிறுமி 6ம் வகுப்பு படித்து வந்த நிலையில், வியாழன் அன்று இரவு விளையாடிவிட்டு இயல்பாக சென்றுள்ளார். பின்பு ஒரு 12.30 மணியளவில் இதயத்தில் வலி ஏற்பட்டதுடன், கடுமையான சுவாச பிரச்சினையும் ஏற்பட்டுள்ளது. இதனை சிறுமி தனது பாட்டியிடம் தெரிவித்துள்ளார்.
மருத்துவமனை செல்வதற்கு ஆட்டோ வரும் முன்னே சிறுமி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். சிறுமியின் மாமா சிபிஆர் சிகிச்சை கொடுத்தும் பலனளிக்கவில்லை.
குறித்த சிறுமியின் இறப்பு அப்பகுதியில் பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது.
