இத்தாலியில் இருந்த வந்த 125 பயணிகளுக்கு பாதிப்பு! அதிர்ச்சி தகவல்;
கொரோனா வைரஸ் மற்றும் ஓமிக்ரோன் வைரஸ் இரண்டும் இந்தியாவை ஆட்டிப்படைக்கும் வேலையில், பல காட்டுப்பாட்டு ஊரடங்கை நீட்டித்துள்ளது. தினசரி கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை இன்று அதிரடியாக 90 ஆயிரத்தை கடந்துள்ளது.
மகாராஷ்டிரா, டெல்லி, கர்நாடகா, தமிழகம், கேரளா, குஜராத் என பல மாநிலங்களிலும் தினசரி கொரோனா பாதிப்பு எண்ணிக்கை ஒரேயடியாக அதிகரித்துள்ளது.
இதனிடையே, வெளிநாடுகளில் இருந்து திரும்புபவர்களுக்கே பெரும்பாலும் ஓமிக்ரோன் தொற்று உறுதி செய்யப்பட்டு வந்த நிலையில் தற்போது சமூக பரவலாகவும் ஓமிக்ரோன் உருவெடுத்துள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவிக்கின்றனர்.
அந்த வகையில், இத்தாலியில் இருந்து பஞ்சாப் மாநிலம் அமிர்தசரஸ் நகருக்கு வந்த விமானத்தில் பயணிகள் 125 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக விமான நிலைய இயக்குனர் வி.கே.சேத் தெரிவித்துள்ளார்.
இந்த விமானத்தில் மொத்தம் 179 பயணிகள் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார். இது சார்ட்டர் ரக விமானம் எனவும் தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.